சீமான் 'ஹைடெக்' பிரசாரம்
'அங்க பாருடா... அமெரிக்காகாரன் எப்படி தொழில் பண்றான்; நல்லா பாருடா... பிரேசில்காரன் என்ன மாதிரி விவசாயம் பண்றான்... ெஹலிகாப்டர்ல போய் ஆடு, மாடு மேய்க்குறான் பாருடா... பூமியைத் தாய் தாய்ன்னு சொல்லிட்டு அது மேல பாலிதீன் குப்பையை வீசியெறியற... கழிவுநீரை திறந்துவிடற ... இந்த பூமி, காத்து, தண்ணீ எல்லாத்தையும் நாசமாக்கிட்டியேடா....? எனக்கொரு வாய்ப்பு கொடுத்து பாரு. சுத்தமான காற்று, தண்ணியை தர்றேன்... எல்லாத்துக்கும் அரசு வேல தர்றேன்; இலவசம் கொடுத்தது கையேந்த வைக்கமாட்டேன்...'' இப்படி தான் பிரசாரம் செய்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மேடையில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில், 'சிப்காட்' தொழிற்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஒளிப்படம் காட்டப்படுகிறது.
இத்தகைய பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதை சீமான் விளக்குகிறார்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் என, பல்வேறு வெளிநாடுகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் தொழில் கூடங்கள், விவசாயம் சார்ந்த மதிப்புக்கூட்டு தயாரிப்பு தொடர்பான காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது.
ஆடு, மாடு, கழுதை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம், ஒவ்வொரு நாடும் அத்தகைய தொழில் மூலம் எத்தகைய பயன் பெறுகிறது என்பதையும் ஒளிப்படமாக காட்டி விளக்குகிறார்.வாக்காளர்களிடம் 'டேய்' போட்டு மிக இயல்பாக பேசும் சீமான், 'நான் உங்க வீட்டு பிள்ளை; நீங்க எல்லாம் என் அண்ணன், தங்கை, அப்பா, அம்மா என, உரிமை கொண்டாடி, 'எனக்கொரு வாய்ப்பு கொடுங்க' என ஓட்டு கேட்கிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்