Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ராகுலுக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே 'சீட்!'

ராகுலுக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே 'சீட்!'

புதுடில்லி: தேர்தல் ஆணையம், 37 ராஜ்யசபா 'சீ ட்'களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சிகளிலும், பலரும் எப்படியாவது சீட் கிடைக்க வேண்டும் என, முட்டி மோதி வருகின்றனர். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் பலம், குறிப்பாக, காங்கிரசின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், காங்., தலைவர்கள் பலரும் தங்களுக்கு சீ ட் கிடைக்குமா என ஆவலில் உள்ளனர்.

ஆனால், ராகுலோ தன்னுடன் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே, ராஜ்யசபா எம்.பி., பதவி தரப்போகிறார் என, காங்கிரசுக்குள் பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தமிழரான, மீனாட்சி நடராஜனுக்கு சீட் வழங்க முடிவு செய்துவிட்டார்.

பார்லிமென்டில் மற்றும் பொதுவெளியில் ராகுலின் பேச்சுகளை தயாரிப்பவர் அமிதாப் துபே; இவர் எழுதிக் கொடுப்பதைத் தான் ராகுல் படிப்பார். ராகுலின் குழுவில், துபே முக்கிய பங்கு வகிப்பவர். 'இவருக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவியைத் தர, ராகுல் தயாராகிவிட்டார்' என்கின்றனர் காங்கிரசார்.

இத்துடன் ராகுல் நிற்கவில்லை. இன்னொருவருக்கும் சீட் தர முன்வந்துள்ளாராம். அவர் பவன் கெரா; காங்கிரசின் செய்தி தொடர்பாளர். ஊடகங்களில் காங்., சார்பாக பேசி வருபவர். கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த காங்., தலைவர்கள் இதனால் மிகவும் நொந்து போயுள்ளனர்.

'பல மாநிலங்களில் கட்சி வளராமல் போனதற்கு இதுதான் காரணம். அடிமட்ட தொண்டர்களுக்கு பதவி வழங்காமல், மக்களோடு தொடர்பில்லாதவர்களுக்கு சீட் கொடுப்பது காங்., பழக்கம். அதனால்தான் இப்படி பரிதாப நிலையில் கட்சி உள்ளது' என்று புலம்புகின்றனர், தொண்டர்களும் தலைவர்களும்.

Advertisement

பிப் 22, 2026 05:06 pm

ராஜ்ய சபை உறுப்பினர் என்றாலே டம்மி தானே.

Reply Rate this
பிப் 22, 2026 08:15 am

அப்போ வெளிநாட்டிலிருந்து தான் ஆளை தேர்ந்தெடுக்கனும்.

Reply Rate this