Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 விருப்ப மனுவுக்கான அவகாசத்தை நீட்டித்த சசிகலா!

 விருப்ப மனுவுக்கான அவகாசத்தை நீட்டித்த சசிகலா!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட, விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை, இன்று மாலை வரை நீட்டித்து, சசிகலா அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோர், மார்ச் 18 முதல் 22ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, அதை பூர்த்தி செய்து வழங்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், தொண்டர்கள் பலர், விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று இரவு 7:00 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். விருப்ப மனுக்களை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முகாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement