Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


கூட்டணி பேச்சு நடத்த தயக்கம்; காங்.,கை 'கழற்று'கிறது தி.மு.க.,?

கூட்டணி பேச்சு நடத்த தயக்கம்; காங்.,கை 'கழற்று'கிறது தி.மு.க.,?

'கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், பா.ஜ.,வின் அழுத்தம் குறையும்' என, தி.மு.க., தலைமைக்கு அமைச்சர்கள் சிலர் யோசனை தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுலை, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி சமீபத்தில் டில்லியில் சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார்.

அதில், எந்தவொரு உத்தரவாதத்தையும் கனிமொழியிடம் ராகுல் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனால், தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பணிகளை துவங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது, தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், மத்திய பா.ஜ., அரசின் அழுத்தம் குறையும் எனவும் அவர்கள் ஆலோசனை கூறியதாக தெரிகிறது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், முதல்வர் ஸ்டாலினை, மூத்த அமைச்சர்கள் சிலர் சந்தித்து பேசினர்.
அப்போது, அவர்கள் கூறியுள்ளதாவது: தி.மு.க.,விற்கு நம்பிக்கையான கட்சியாக இருக்க வேண்டிய காங்கிரஸ், தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடி தருகிறது. அந்த கட்சிக்கு, 5 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக, மத்திய அரசும், பா.ஜ.,வும், தி.மு.க.,வுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. காங்கிரஸ் கூட்டணியால், ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில், பா.ஜ.,விடம் விரோதம் தான் வளர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டால், தி.மு.க., மீதான பா.ஜ.,வின் அழுத்தம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'காங்கிரஸ் கட்சியை நாமாக வெளியேற்ற வேண்டாம்; அவர்களாக வெளியேறினால், அதை பற்றி கவலைப்பட வேண்டாம்' என அமைச்சர்களிடம் கூறி உள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement

பிப் 07, 2026 07:37 pm

காங்..க்கு அலுத்து விட்டது. எத்தனை வருடம் தான் திமுக முதுகுலேயே சவாரி செய்வது. விஜய்யின் தவெக 70 சீட். 6 மந்திரி பதவி தருவதாக சொல்கிறதே. அதன் முதுகில் சாவரி செய்து பார்த்தாலென்ன என்ற நப்பாசை மேலோங்கி விட்டது. காங்.. விலகினால் விசிக க்கு மவுஸ் கூடும். 25 சீட்க்கு அடி போடும்.

Reply Rate this
பிப் 06, 2026 09:05 pm

திமுகவுக்கு அவ்வளவு தைரியம் இல்லை.

Reply Rate this
பிப் 06, 2026 07:40 pm

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் நஷ்டம் திமுகவுக்கு அல்ல என்பதை புரிந்து கொண்டால் காங்கிரஸுக்கு நல்லது!

Reply Rate this
பிப் 06, 2026 03:38 pm

விதி வலியது.

Reply Rate this
பிப் 06, 2026 01:26 pm

அட அயோக்கியர்களா, மத்திய அரசோ அல்லது பிஜேபி யோ உங்கள் மீது அழுத்தம் கொடுக்கிறார்களா. அப்படி ஒன்றுமே இல்லையே எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு திரிபவர்கள் நீங்க அல்லவா. இந்தக் குன்றிய அரசின் கையாலாக தனத்தை மத்திய அரசின் மீது போட வேண்டாம்.

Reply Rate this
பிப் 06, 2026 01:15 pm

காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இருக்கும் அளவுக்கு கூட தொண்டர்கள் இல்லை. இந்த லட்சணத்துல அதிக சீட், ராஜ்யசபா சீட், அமைச்சர் பதவி என்று அடுக்கிக்கொண்டே செல்கின்றனர். முதலில் பூத் ஏஜென்ட் இருக்காங்களா? விஜய் கட்சி கொடுக்கும் தைரியத்தில் இருக்காங்க. பேசாம கழட்டி விடுங்க தலைவரே

Reply Rate this
பிப் 06, 2026 11:27 am

பூத் ஏஜென்ட்க்கு போட கூட ஆள் இல்லாத, தலைவர்கள் மட்டுமே உள்ள வேஸ்ட் லக்கஜ் . விஜய் உடன் கூட்டணி அமைத்தால் தொகுதிக்கு போட்டி போட வேட்பாளர்களை தேடித்தான் அலையவேண்டும் . உறுதியாக தோல்வி என்று தெரிந்து போவதால் தேர்தலில் நின்று சேர்த்த பணத்தை வீணாக்க யாரும் துணிய மாட்டார்கள்

Reply Rate this
duruvasar - indraprastham
ஒப்பாரி வெக்காத நைனா . எங்கபூடபோறானுக . அலுவாதே .பெரும்பொதுரு ஆலு நம்பாலாண்டாதான் கீர்ராரு
பிப் 06, 2026 02:48 pm
Rate this
பிப் 06, 2026 11:19 am

DMK , காங்கிரஸ் ஐ கழட்டி விட முடிவு செய்தால் தான் பப்பு ராகுல் அலறியடித்து கூட்டணிக்கு ஓடி வருவார் .

Reply Rate this
RAMESH AZHUKKALAYAM ADAPPU EDUTHU 200 ROOVAA COOLIE START AAYIYUDUTHA.ENGA MAADHANGALAAGA MUTTU KODUKKA KAANUM INDHA MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU.
பிப் 06, 2026 01:10 pm
Rate this
ramesh - chennai
கிருஷ்ணா உன்னுடைய குடும்பம் 200 ரூபாய் வ்ருமானத்தில் தான் உன் குடும்ப ஜீவனம் நடக்கிறது என்பதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே .உன்னுடைய 200 ரூபாய் வருமான ஜீவன ரகசியத்தை அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறாயே கிருஷ்ணா.
பிப் 06, 2026 01:36 pm
Rate this
ramesh - chennai
கிருஷ்ணா உன்னுடைய குடும்பம் 200 ரூபாய் வ்ருமானத்தில் தான் உன் குடும்ப ஜீவனம் நடக்கிறது என்பதை இப்படி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே .உன்னுடைய 200 ரூபாய் வருமான ஜீவன ரகசியத்தை அடுத்தவர்கள் மீது சுமத்த பார்க்கிறாய் கிருஷ்ணா
பிப் 06, 2026 05:20 pm
Rate this
பிப் 06, 2026 11:07 am

ராகுல் காந்தி அரசியல் அறிவு எந்த அளவு குறைவாக உள்ளது என்று இந்த மண் குதிரை விஜய் கூட்டணி விஷயத்தில் தெரிந்து விட்டது .

Reply Rate this
duruvasar - indraprastham
ரமேசு அப்செட் ஆவாதே , உன்ன உட்டுட்டு எங்கப்பூடுவானுங்க . அவனுங்க நம்மாளு. சுமாம்கட்டியும் பயாஸ்கோப்பு கட்டிகிணுக்கிறானுகோ
பிப் 06, 2026 02:39 pm
Rate this
பிப் 06, 2026 08:40 am

காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகிய உடன் எதுவுமே இல்லாமல் பி ஜே பியுடன் திமுக கூட்டணி பேசும்.

Reply Rate this