Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ராமதாஸ் அணி வேட்பாளர் அன்புமணியிடம் தஞ்சம்

 ராமதாஸ் அணி வேட்பாளர் அன்புமணியிடம் தஞ்சம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திண்டிவனம்: விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் புகழேந்தி, அன்புமணியிடம் ஐக்கியமானார். அணி மாறிய அவரை கட்சியை விட்டு நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ம.க.,வில் தற்போது ராமதாஸ், அன்புமணி என இரு பிரிவாக பிளவு பட்டுள்ளது. வரும் தேர்தலில் இரு தரப்பினரும் போட்டி போட்டிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர்.

இதில் விக்கிரவாண்டி தொகுதியில், அன்புமணி தரப்பில் மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ., சிவக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் ராமதாஸ் அணி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், புகழேந்தி சென்னையில் அன்புமணியை சந்தித்து, அவரது அணியில் ஐக்கியமாகி விட்டார்.
இதனால் டென்ஷனான ராமதாஸ், தனது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

Advertisement

ஏப் 06, 2026 02:40 pm

பாஜக ஹேப்பி அண்ணாச்சி.

Reply Rate this
ஏப் 05, 2026 10:48 pm

Dr.Ramdass is senile now due to his advanced age , at this age , he will become more adamant and will not change his mind .

Reply Rate this
ஏப் 05, 2026 07:33 pm

பார்த்து அன்புமணி.

Reply Rate this
ஏப் 05, 2026 05:59 pm

சங்கரா சங்கரா

Reply Rate this
ஏப் 05, 2026 04:52 pm

அங்கேன்னா செலவை சொந்தப்பணத்தில் செய்யணும். இங்க பி எம் கேர்ஸ் கேஷ் கிடைக்கும்.

Reply Rate this
ஏப் 05, 2026 04:38 pm

ராமதாஸ் தேர்தலுக்கு பிறகு இந்த முடிவை எடுப்பார்

Reply Rate this
ஏப் 05, 2026 04:03 pm

ஓவர்

Reply Rate this
ஏப் 05, 2026 03:44 pm

அரசியலில் அப்பாவும் மகனும் சண்டை போடலாமா? ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். கட்சியில் அப்பாவும் மகனும் சண்டை போட்டால் மாம்பழத்தை எப்போது ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர் கட்சிகளுக்கு கொண்டாட்டம். கலைஞர் தன் மகன் ஸ்டாலினை துணை முதல்வராக்கி அழகு பார்த்தார் ஸ்டாலின் தன மகன் உதயநிதியை துணை முதல்வராக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்பா மகன் உறவு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.

Reply Rate this
எதிரிகள் ஜுஸ் போடும் முன்னே அவர்களே பழத்தினை பஞ்ஜாமிர்தம் ஆக்கிவிடுவார்கள்
ஏப் 05, 2026 04:57 pm
Rate this
what about Azhagiri and Karunanidhi?
ஏப் 05, 2026 06:25 pm
Rate this
ஏப் 05, 2026 03:30 pm

அரசியல் ஓய்வு எடுக்க வேண்டிய நாளில் நானும் அரசியல் ஆடுவேன் என்றால் சொந்த கட்சிக்காரன் ஓட தான் செய்வான்

Reply Rate this