Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேர்தலில் போட்டியில்லை: திருமாவளவன் பல்டி

 தேர்தலில் போட்டியில்லை: திருமாவளவன் பல்டி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: “சட்டசபை தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிடவில்லை, ஜோதிமணி இளையபெருமாள் போட்டியிடுவார்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

சட்டசபைக்கு செல்ல விரும்பி, இதற்கு முன், மங்களூரு தொகுதியில் வென்றேன். இரண்டரை ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்தேன். பின் அ.தி.மு.க., கூட்டணியில், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், அப்போது, என்னுடன் பயணித்த, தற்போதைய தமிழக காங்., தலைவருக்கு விட்டு கொடுத்தேன்.

அப்போது போட்டியிட்டு இருந்தால், ஐந்தாண்டுக்கு ஒருமுறை, எம்.எல்.ஏ.,வுக்கு போட்டியிட்டு இருப்பேன். கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். பின், எம்.பி.,யானாலும், அவ்வப்போது சட்டசபைக்கு செல்ல ஆசை இருந்தது.

இந்த தேர்தலில் வலதுசாரி கைகள் ஓங்கி வருகின்றன. தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, வலதுசாரி கட்சிகள், என்னை கூட்டணியில் இருந்து விலக்க முயற்சித்தனர். தி.மு.க., கூட்டணி, தொடர்ந்து கட்டுக்கோப்பாக இருப்பதற்கு, நான் முக்கிய காரணம்.

இந்நிலையில், தேர்தலுக்கு பின் தொங்கு சட்டசபை உருவாகும் என்பதால், கூட்டணி ஆட்சி அமையும்; எம்.பி., பதவியை விட்டு, சட்டசபைக்கு வரும் திருமாவளவன், துணைமுதல்வராக யோசிக்கிறார் என, அவதுாறுகளை பரப்புகின்றனர். மேலும், தி.மு.க.,வுக்கு சொம்பு துாக்கியதால், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவதுாறு பரப்புகின்றனர்.

இந்த தேர்தலுக்கு பின், தமிழக அரசியல் சூழல் மாறும் என்பதால், சட்டசபையில் இருக்க ஆசைப்பட்டேன். என்னை யாரும் மன மாற்றம் செய்ய முடியாது. நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறாது என்று கூறுவதை ஏற்க முடியாது.

யுத்த களத்தில் முன்னோக்கி போவது ராஜதந்திரம் என்றால், ஒரு அடி பின்னால் போவதும் ராஜதந்திரம் தான். எனது நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். யுக்தியை மாற்றி அமைக்கிறேன். காட்டுமன்னார்கோவிலில், ஜாதி ஒழிப்புக்கு போராடிய, இளையபெருமாளின் மகன் ஜோதிமணி, வி.சி.க., வேட்பாளராக போட்டியிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ஏப் 05, 2026 09:36 am

அண்ணாமலை போல

Reply Rate this
அண்ணாமலையை ..... உனக்கு
சோறு தண்ணி இறங்காது
ஏப் 05, 2026 12:05 pm
Rate this
ஏப் 05, 2026 08:03 am

திருமா போட்டியிட போகிறார் என்றதும் இந்த தொகுதி மட்டும் விசி நிச்சய வெற்றி என்று பேசப்பட்டது...இப்ப அதும் புட்டுக்கும்.

Reply Rate this
ஏப் 05, 2026 07:11 am

திருமாவளவனை மிரட்டி தி.மு.க. பின் வாங்க வைத்து விட்டது.

Reply Rate this
ஏப் 05, 2026 06:53 am

ராஜதந்திரமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.
திருமாவின் சமீபத்திய நாடகத்துக்கு திமுகதான் காரணம், சீட்டு கேட்டு இழுத்தடித்த திருமாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க திமுக விசிகவை உடைக்க அக்கட்சியின் MLA க்களான ஆளூர் ஷாநாவஸ் போன்ற திமுக அடிமைகளிடம் திட்டம் வகுத்து கொடுத்தது.

அதை தாமதமாக தெரிந்து கொண்ட திருமா திமுக கொடுத்த தொகுதிகளை சத்தமில்லாமல் பெற்றுக் கொண்டார். அப்போதிருந்தே ஆளூர் ஷாநாவாஸ் போன்ற இந்த திமுக அடிமைகளுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். அவனுகளை கழட்டி விட குருமா நடத்திய நாடகம்தான் அவர் எம்பி பதவியை ராஜினாமா பண்ணிட்டு தமிழக சட்டசபைக்கு போட்டியிடுகிறேன் என்று அறிவித்ததது.

இப்போது,தான் நினைத்தது போல அவனுகளை கழட்டி விட்டாச்சு என்பதால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் நடத்திய நாடகம் முடிவுக்கு வந்தது.


எனவே திருமா தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் எம்பி பதவியில் தொடருவார். இன்னும் மூன்று வருடம் இருக்கும் பதவி அதனால் கிடைக்கும் சலுகைகளை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியுமா? அவர் அரசியலில் கோமாளியாக இருந்தாலும் ஏமாளி அல்ல!

Reply Rate this
ஏப் 05, 2026 06:24 am

அடேங்கப்பா திருமா தேர்தலில் போட்டி என்றவுடன் சிறுத்தை குட்டிகள் மகா விளக்கங்கள் தந்தன .அவரின் முடிவு இந்த நூற்றாண்டின் மிக சிறந்த ராஜா தந்திரம் .ஈடு இணையற்ற சாணக்கியத்தனம் . அரசியல் முடிச்சுக்களை அவிழ்ப்பதில் கருணாநிதியை விஞ்சி விட்டார் என புகழ்ந்து தள்ளி விட்டனர் .


இப்போது தேர்தலில் போட்டியில்லை என திருமா சொன்னவுடன் வேறு வழியின்றி உணர்ச்சிகளை குறைத்திட தூத்துக்குடி விளைச்சல்களை உணவில் சேர்க்காமல் சாப்பிடும் இந்த சிறுத்தை குட்டிகள் .என்ன கொடுமை சரவணன் இது ? இதற்கும் ஆர் எஸ் எஸ் தான் காரணம் என சொன்னாலும் நம்பும் சிறுத்தை குட்டிகள் இருக்க நமக்கு என்ன கவலை ?

Reply Rate this