அடிக்கடி மூளைச்சலவை; கவலையில் வி.சி.க.,
- நமது நிருபர் -
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும், தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என, நேற்று காலை கேட்டுக்கொண்டார். உழவர்கரை தவிர மற்ற தொகுதி வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு சேகரிப்பர் என்றும் கூறினார். புதுச்சேரியில், தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிடுவதற்கு, 'கூட்டணியில் ஏற்பட்ட உடன்பாடு' என்று காரணம் சொன்னார்.
தி.மு.க.,- - காங்., உடனான கூட்டணியில், வி.சி., கட்சிக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி மட்டும் என்றதால் தான், உடன்பாடு ஏற்படாமல் கடந்த மார்ச் 24 அன்று கூட்டணியை விட்டு வெளியேறி, வி.சி.க., சார்பில் நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். இப்போது, கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்கிறார்.
இதேபோல், கூட்டணி பெயரை சொல்லி, நேற்று முன்தினமும் 'பல்டி' அடித்தார். தமிழகத்தில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில், தானே போட்டியிடப்போவதாக அறிவித்து இருந்த நிலையில், 'நான் போட்டியிடப் போகிறேன் என்று கூறியதும், கூட்டணி ஆட்சிக்கும், துணை முதல்வர் பதவிக்கும் ஆசைப்படுகிறார் என்று ஊகங்கள் கிளம்பின. எங்கள் கூட்டணியின் நலனை பாதிக்கும் வகையிலான கருத்து பரப்பல் நடக்கிறது. எனவே நான் பின்வாங்குவதும் ராஜதந்திரம் தான்' என்று சொல்லி, போட்டியில் இருந்து திருமாவளவன் விலகிக்கொண்டார்.
தொடர் பல்டிகள், அதுவும் புதுச்சேரியில் போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கோரும் அளவிற்கான பல்டிக்கு காரணம், தி.மு.க.,வின் ராஜதந்திரம் தான்.
ஏற்கனவே, நம் நாளிதழின் 'தேர்தல் களம்' இணைப்பில் திருமாவளவனின் துணை முதல்வர் திட்டம் குறித்து வெளியிட்டிருந்தோம். அதன்படியே தி.மு.க., தரப்பு செயல்பட்டது.
தொங்கு சட்டசபை ஏற்பட்டால், சட்டசபையில், திருமா தலைமை இல்லாத வி.சி.க., - எம்.எல்.ஏ.,க்களை தி.மு.க.,வின் குடைக்குள் கொண்டுவர முடியும். திருமா இருந்தால் சிக்கல் என்று கணித்த தி.மு.க., 'திருமா தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அதை சாதிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று கூறி, வேலையை தி.மு.க.,வின் தேர்தல் வியூக அமைப்பான 'பென்' நிறுவன தலைவரும், முதல்வர் ஸ்டாலினின் மருமகனுமான சபரீசனிடம் ஒப்படைத்தது.
உடனடியாக வேலையில் இறங்கிய சபரீசன், தன் 'பென்' அமைப்பை, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கருத்துக் கணிப்பு நடத்த உத்தரவிட்டார். குறுகிய காலத்தில் 5,000 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு, கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகளுக்கான புள்ளி விபரங்களை அலசி ஆராய்ந்த வியூக வகுப்பு டீம், அதையெல்லாம் கோப்புகளாக தயார் செய்தனர். இதெல்லாம் தயாரான உடன், திருமாவை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார் சபரீசன்.
அப்போது, திருமாவிடம் அவர் கூறியதாக வி.சி., கட்சியினர் தெரிவிப்பது: இதோ பாருங்கள், உங்களுக்காக கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறோம். நீங்கள் பெருந்தலைவர். ஆனால், பெருந்தலைவர்களுக்கும் சில தொகுதிகள் கை கொடுக்காது. காட்டுமன்னார்கோவில் அப்படி ஒரு தொகுதி. அங்கு போட்டியிடுவது தோல்வியை தான் தரும்.
ஆளுமைமிக்க ஒரு தலித் தலைவராக நீங்கள் உருவெடுப்பதை, தலித் அல்லாத மற்ற ஜாதி மக்கள் விரும்பாததே அதற்கு காரணம்.
கடந்த 2019 மற்றும் 2024 பார்லிமென்ட் தேர்தல்களில், சிதம்பரம் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டீர்கள். அதற்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் பெற்ற ஓட்டுகளைவிட, 2021ல், உங்கள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வன் பெற்ற ஓட்டுகள் அதிகம். அதேபோல, இரு லோக்சபா தேர்தலிலும் உங்கள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்றுள்ளார்.
நீங்கள் ஆளுமையாக வளருவதை, பிற ஜாதியினர் விரும்பவில்லை. அதனால், இம்முறை போட்டியை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு இஷ்டப்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி, கட்சிக்குள் அழுத்தமான ஆளுமையை செலுத்தி இருக்கும் நீங்கள், தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், உங்கள் பெயர் பாழாகும். பின், வி.சி.க., சார்பில் வெற்றி பெற்று வரக்கூடிய எம்.எல்.ஏ.,க்கள் உங்கள் சொல்படி நடப்பது சிரமம். அதனால், போட்டியிடலாமா என்பதை ஒரு முறைக்கு நுாறு முறை யோசியுங்கள். வெளியில் இருப்போர் பேச்சை கேட்டு, அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
ஒருவேளை, தொங்கு சட்டசபை அமைந்து, உங்கள் கட்சி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருந்தால், அப்போது, தி.மு.க.,வும் உங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க தயாராக இருக்கிறது.
தி.மு.க.,விடம் இருந்து எட்டு தொகுதிகளை கேட்டு பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டீர்கள். அவர்கள், தேர்தல் செலவுக்கு கஷ்டப்படுவது தெரிகிறது. நீங்கள் விரும்பினால், அதையும் தி.மு.க., தரப்பில் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு திருமாவிடம் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயங்கள், திருமாவை ரொம்பவே யோசிக்க வைத்தன. அதன் பின்பே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவை அவர் மாற்றிக்கொண்டார்.
'எங்கள் தலைவர் முதலில் ஆதவ் அர்ஜுனாவால் மூளைச்சலவை செய்யப்பட்டார். இப்போது தி.மு.க.,வால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார். ஏதேனும் ஒரு சலவையில் இருந்தால் பரவாயில்லை. தினம் தினம் சலவை செய்து கொண்டு, தான் எடுக்கும் முடிவுகளை மாற்றுவதால், கூட்டணி கட்சியினரே எங்களை கிண்டலாக பேசுகின்றனர்' என வி.சி., கட்சியினர் புலம்புகின்றனர்.
Advertisement
அழுக்கு சேர்ந்தால் சலவை செய்ய்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் நாறும்.
எனக்கும் பசிக்கும் ல நானும் சாப்பிடணும் ல காசும் வருது.ஒப்பந்தங்களும் வருது.அப்புறம் எதுக்கு சுயமானம்.பல்டி அடிப்போம்.
சொந்த புத்தி இல்லாதவர் . தமிழகத்தில் கொலைகளா உடனே சனாதன சக்திகள் காரணம் என பிதற்றுவது . தமிழகத்தில் பாலியல் கொடுமைகளா உடனே ஆர் எஸ் எஸ் காரணம் என உளறுவது .தமிழகத்தில் போதை வஸ்துக்கள் புழக்கமா உடனே ஆரிய சதி காரணம் என ஓலமிடுவது .தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைவா உடனே வருணாசிரம சக்திகள் காரணம் என ஒப்பாரி வைப்பது . இதை தான் திருமா பல வருடங்கள் செய்து வருகிறார். இவர் கட்சி நடத்த தகுதி இல்லாதவர் .சிறுத்தை குட்டிகள் பாவம் .
திருட்டு திராவிடத்தோடு சேர்ந்து அழியப்போகும் இந்தி கூட்டணி கட்சிகள்.
அடிமை அரசியல் தலைவர் இவர். பாவம் என்ன செய்வார். இவருடன் சேர்ந்து விசிகவினரும் அடிமையாக இருப்பார்களா. சுயமாக சிந்திப்பார்களா.
தினம்தினம் சலவை செய்து மூளை பிரகாசமாக வந்தால் பரவாயில்லை. அவரது மூளையை தங்களின் இஷ்டப்படி திமுக செதுக்கிக் கொள்கிறது. அதை வெளியில் சொல்ல முடியாமல் கூட்டணி தர்மம் என்ற சேறு பூசி அடைக்கிறார் திருமா.
தலித் மக்களின் நம்பிக்கையானவன் என்ற அவரது நீலச்சாயம் வெளுத்ததுதான் மிச்சம்.
வயதாகி விட்டது எனவே அவரால் தெளிவாக முடிவு எடுக்க முடியல
கட்சியில் இருக்கும் முன்னனி தலைவர்கள் அனைவரும் திமுக விற்கு ஜால்ரா அடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டனர்
முரண்டு பிடித்தால் கட்சியில் இருந்து இவரை வெளியே தள்ளி விடுவார்கள்
இது தான் உண்மை

இருந்தால் தானே சலவை செய்ய இருப்பது திராவிட சாக்கடை.