Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 கன்னியாகுமரியில் துாக்கிலிடப்பட்ட மோடி, ராகுல் உருவ பொம்மைகள்

 கன்னியாகுமரியில் துாக்கிலிடப்பட்ட மோடி, ராகுல் உருவ பொம்மைகள்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோரது உருவ பொம்மைகள் துாக்கில் தொங்க விடப்பட்டது, காங்., - பா.ஜ., இடையே மோதல் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை அருகே, ஒரு உருவ பொம்மையில் மோடி படம் ஒட்டப்பட்டு துாக்கில் தொங்க விடப்பட்டிருந்தது. கோட்டார் போலீசார் சென்று அதை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

இதையறிந்த பா.ஜ.,வினர், 'மோடி உருவப் படத்தை துாக்கில் தொங்க விட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என வலியுறுத்தி, நாகர்கோவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின், கலைந்து சென்றனர்.

இதை தொடர்ந்து, நகர் காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் உட்பட 20 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நவீன்குமார் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று காலை வடசேரி அருகே மின் கம்பத்தில் ராகுல் உருவப்படத்துடன் கூடிய ஒரு உருவ பொம்மையை துாக்கிலிட்ட பா.ஜ.,வினர், பிரதமர் மோடியை அவமதித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் சென்று உருவபொம்மையை கைப்பற்றினர்.

இது தொடர்பாக பா.ஜ., கவுன்சிலர் சுனில் குமார் உள்ளிட்டோர் மீது, காங்கிரசார் புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் நெருங்கும் நிலையில் உருவ பொம்மைகள் துாக்கிலிடப்பட்ட விவகாரம், காங்., - பா.ஜ., இடையே மோதல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மார் 03, 2026 03:21 pm

யாப்பா உங்களுக்கெல்லாம் மூளை இப்படி வேலை செய்யுது. அந்த மூளையை தூக்கி வெளிய போடுங்கப்பா.

Reply Rate this
மார் 03, 2026 06:07 am

இரண்டு கட்சிகளிலும் குட்டிகள் குரைத்து நாய் தலையில் பழி சேர்க்கிறார்கள்

Reply Rate this
மார் 03, 2026 04:27 am

இரண்டு கட்சியிலும் மனநலம் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்னும் காங்கிரஸ்தான் இந்தியாவை ஆள்வதாக நினைத்துக்கொண்டு பலர் இருக்கிறார்கள்.

Reply Rate this
மார் 03, 2026 01:36 am

யாமறிந்த மனிதர்களில் தமிழர்களைப் போன்ற முட்டாள்களை எங்கும் காணோம்

Reply Rate this

தலை இருக்க வால் ஆடுகிறது.திராவிஷங்களே அமைதியா இருக்கு.இவிங்க குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு

Reply Rate this

குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு

Reply Rate this