Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இடைப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாக புகார்

இடைப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாக புகார்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சேலம்: சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் காசி களமிறக்கப்பட்டுள்ளார். இதனைத் தவிர்த்து இந்த தேர்தலில் முதல்முறையாக களம் காணும் தவெக விஜய், இந்தத் தொகுதியில் அருண்குமார் என்பவரை வேட்பாளராக அறிவித்தார். இடைப்பாடி தொகுதியில் 36 பேர் களமிறங்கினர்.

இந்த தொகுதியில் வேட்புமனு பரிசீலனை இன்று நடந்தது. இதில், தவெகவின் அருண்குமார் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தொடர்ந்து அவரை எங்கும் காணாததால், அவர் கடத்தப்பட்டு விட்டதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் வேட்புமனு பரிசீலனை நடக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

ஏப் 07, 2026 06:16 pm

நல்ல ஸ்கிரிப்டா எழுதுங்கப்பா. அவங்க தலைவர் பட ஸ்கிரிப்ட் மாதிரியே இருக்கு. டைரக்டர் யாரு ஆதவனா?

Reply Rate this
ஏப் 07, 2026 05:57 pm

கடத்தப்படவில்லை எல்லாம் நாடகம்

Reply Rate this
ஏப் 07, 2026 05:49 pm

இது அரசியல் கட்சியல்ல. தற்குறி கூட்டம்.

Reply Rate this
ஏப் 07, 2026 04:46 pm

கடத்துர அளவுக்கு இ.......?

Reply Rate this
ஏப் 07, 2026 04:37 pm

தேர்தல் டிக்கெட் வாங்க 5 கோடி நிதி கேட்டால் எங்க போவது இது ஓரு சந்தர்ப்பம் கொஞ்சம் கூட போட்டு கருவங்க. கொஞ்சம் பணம் பார்த்த மாதிரியும் தெரியும்.

Reply Rate this
ஏப் 07, 2026 04:22 pm

எல்லாம் காசுக்குத் தான்.

Reply Rate this
ஏப் 07, 2026 04:14 pm

இது ஒண்ணும் புதுசு இல்ல. எத்தினியோ வருஷமா நடக்கும் விஷயந்தான். இதுக்குனே ஆளும் கட்சியில் கமுக்கமாக ஏற்பாடு பண்ணி ஆளுங்களை ரெடி பண்ணி வச்சிருப்பானுங்க. இல்லா கட்டி மும்பையில் இருந்து ஆளுங்களை ரெடி பண்ணி கச்சிதமா
வேலையை முடிச்சிடுவானுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் வேட்பாளர் விஜய் கடத்தப்பட்டார் ன்னு நியூஸ் வந்தால் ஆச்சரியப்பட முடியாது.

Reply Rate this
his disappearance gives advantage to EPS and not to DMK.
ஏப் 07, 2026 04:30 pm
Rate this