Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மா.கம்யூனிஸ்ட் - வி.சி., பிடிவாதம்; தர்மசங்கடத்தில் ஸ்டாலின்

மா.கம்யூனிஸ்ட் - வி.சி., பிடிவாதம்; தர்மசங்கடத்தில் ஸ்டாலின்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்டு பிடிவாதம் பிடிப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐந்து தொகுதிகள் வழங்க தி.மு.க., முடிவு செய்தது.

அதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னையில் நேற்று முன்தினம், தேசிய பொதுச்செயலர் பேபி தலைமையில், மாநில நிர்வாகக் குழுவை கூட்டி ஆலோசித்தது. அதில், கடந்த முறை போலவே, ஆறு தொகுதிகளுக்கு குறையாமல் பெற முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று, சென்னை அறிவாலயத்தில் அவரை, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்தனர்.

அப்போது, 'சில சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு 'சீட்' ஒதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இடம்பெற்றதால், தங்களுக்கு ஆறு தொகுதிகள் தர முடியவில்லை; ஐந்து தொகுதிகளை தருகிறோம். அதை ஏற்று கூட்டணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அதை ஏற்காத சண்முகம், பின்னர் அளித்த பேட்டி:
'தி.மு.க., தலைமையில் பல்வேறு கட்சிகள் புதிதாக வந்து சேர்ந்திருப்பதால், கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது சிரமம். நீங்கள் தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும்' என முதல்வர் கூறினார்.

'கடந்த முறை வாங்கிய ஆறு தொகுதிகளுக்கு மேல் வலியுறுத்த வேண்டும்' என, எங்கள் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. புதிதாக கூட்டணி கட்சிகள் சேர்ந்திருப்பதால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளை பெற வேண்டும் என்றும், அதற்கான பேச்சு நடத்த வேண்டும் என்றும், மாநில நிர்வாகக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது.

எங்களிடம் ஐந்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஏற்றுக்கொள்வது சிரமம் என கூறினோம். முதல்வரின் கருத்தை மாநில செயற்குழுவில் விவாதித்து, முடிவு என்ன என்பதை, நாங்கள் உரிய முறையில் சொல்வதாக அவரிடம் கூறியுள்ளோம். சென்னையில் கட்டாயம் போட்டியிடுவோம். தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், வி.சி.,யும் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதற்கு தி.மு.க., ஒப்புக்கொள்ளாத நிலையில், கடந்த முறை பெற்ற ஆறு தொகுதிகளை விட, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதனால், தொகுதி பங்கீடை முடிப்பதில், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், வி.சி.,க்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்யவும், தேர்தல் அறிக்கை தொடர்பாக முடிவெடுக்கவும், இன்று மாலை 3:00 மணிக்கு, கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னையில் நடக்கும் என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் கூடுதல் தொகுதி கேட்டு பிடிவாதம் பிடிப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இன்று இரு கட்சிகளையும் சமாதானப்படுத்தி, தொகுதி பங்கீடை முதல்வர் முடித்து விடுவார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மார் 23, 2026 08:34 pm

கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றாலே தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடும் கட்சி என்பதுதான் ஓர் அடிப்படை கருத்து. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறுபட்ட தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வேண்டி இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த அரசு யாருக்கும் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை என்ற ஒரு நிலையில் உழைப்பாளர்களின் உறுதுணையாக இருக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகள் சீட்டுக்காகவும் செலவு தொகைக்காகவும் கொள்கையை விட்டுவிட்டுஅதே கட்சிக்காக ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது கொள்கை விரோதம் அல்லவா?

Reply Rate this
மார் 23, 2026 06:36 pm

தர்மம் என்றால் என்னவென்றே தெரியாத தற்குறிக்கு எல்லாம் தர்மசங்கடம் வருமா?

Reply Rate this
மார் 23, 2026 11:18 am

அந்த இரண்டு கட்சியும்.... அறிவாலயத்தில் கொடுப்பதை வாங்கி கொண்டு.... அமைதியாக போய் விடுவார்கள்.... வெளியே வந்து.... இல்லையென்றால் பிஜேபி உள்ளே பூந்துறும் என்று கதை விடுவார்கள் பாருங்கள்.

Reply Rate this
மார் 23, 2026 10:43 am

அவருக்கு ஏது தர்மம். அதனால எதுக்கு சங்கடம்.

Reply Rate this
மார் 23, 2026 10:42 am

தொகுதிகளை குறைத்து கொண்டால் என்ன திராவிட கூட்டம் பேராசை பெறுநட்டம்

Reply Rate this
மார் 23, 2026 10:36 am

அடிபட்ட சிறுத்தை திமிறி உறுமுகிறது . சிவப்பு நரியோ பாய்வதற்கு பதுங்குகிறது.

Reply Rate this