ஐ.ஜே.கே., வேட்பாளர்கள் இரு தொகுதிகளுக்கு அறிவிப்பு
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று அளித்த பேட்டியில், 'அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பல்லாவரம், குன்னம் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன.
'இதில், இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறோம். பல்லாவரத்தில் வழக்கறிஞர் வெங்கடேசன், குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் ஆகியோர் போட்டியிடுவர்' என தெரிவித்தனர்.
குன்னம் தொகுதியில், தி.மு.க., சார்பில் அமைச்சர் சிவசங்கர் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., அணியில், ஐ.ஜே.கே., சார்பில் சரண்யா, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்