Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதீங்க: நயினார் நாகேந்திரனுக்கு திரிஷா கண்டனம்

தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காதீங்க: நயினார் நாகேந்திரனுக்கு திரிஷா கண்டனம்

சென்னை: 'அரசியலில் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர், இழிவான, பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை' என, நடிகை திரிஷா கூறியுள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய் கடந்த 13ல் சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வர வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்' என்றார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகை திரிஷா தன் வழக்கறிஞர் நித்யாஷ் நடராஜ் வாயிலாக, நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம்:

மாநில அரசியலில், உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி பேசலாமா; இப்படியொரு இழிவான, பொருத்தமற்ற கருத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நான் இணைந்திருக்கவில்லை; அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை. அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருக்கவே விரும்புகிறேன்.
அப்படி இருக்கையில், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை, ஒருபோதும் பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்தக் கூடாது. அது மட்டுமின்றி, உயர் பதவிகளை வகிப்பவர்கள், பொது விவாதத்தில் பொறுப்பையும், சமத்துவத்தையும் பராமரிக்க வேண்டும். எனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில், என்னை தொடர்புபடுத்தி பேச வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வருத்தம் தெரிவிக்கிறேன்!



என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நான், தனிநபர் விமர்சனத்தை அனுமதிப்பதில்லை; நானும் அந்த வகையில் பேசியதில்லை. திரிஷா குறித்த பேச்சு, அதனால் எழுந்த சர்ச்சை தொடர்பாக பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி, தமிழக பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் என்னிடம் பேசினர். உண்மையில் இதில் யாரேனும் வருத்தப்படுவார்கள் எனில், நானும் மனப்பூர்வமாக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,



 த.வெ.க.,வினர் போலீசில் புகார்



சென்னையைச் சேர்ந்த த.வெ.க., பிரமுகர் பாலாஜி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

அதில், 'தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், எங்கள் கட்சி தலைவர் விஜய் பெயருக்கு களங்கம் கற்பித்து, இழிவுபடுத்தும் நோக்கத்துடன் அவதுாறான கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்து உள்ளார்.

'ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. விஜயின் நன்மதிப்பை சீர்குலைக்க முயன்ற நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இதேபோல, விஜய் குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை தெரிவித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு, பாலாஜி புகார் அளித்துள்ளார்.

Advertisement

பிப் 18, 2026 12:07 pm

வருத்தமும் தானா கேட்கவில்லை.. வானதி அக்காவும், அண்ணாமலையும், சொன்னதினால் தான் கேட்கிறார்.. சுயமான சிந்தனை வேண்டும்..

Reply Rate this
பிப் 18, 2026 12:18 am

மகளிர் பற்றி கண்ணியமின்றி பேசும் உரிமையை நாகேந்திரன் நயனாருக்கு யார் கொடுத்தது? அந்த உரிமை, பொன்முடிக்கு தான் சொந்தம்.

Reply Rate this
பிப் 17, 2026 10:17 pm

ஒரு சில மாதங்கள் முன்பு திரிஷா வின் படத்தை அட்டைப்படத்தில் போட்டு டெபுடி சி எம் என்ற போது இவ்வளவு கண்டனங்கள் எழ வில்லை

Reply Rate this
பிப் 17, 2026 07:46 pm

அரசியல் கட்சி தலைவனோடு நீ நடிக்கவில்லை அவனும் இப்போது நடிகனில்லை ஆகவே இது அரசியல் ஒதுங்கினால் தனிப்பட்ட வாழ்க்கை இல்லை என்றால் பொதுவெளிதான்.

Reply Rate this
பிப் 17, 2026 04:51 pm

கட்டிய மனைவியை தவிக்க விட்டு விட்டு ஓடிப் போனவரை தலைவராக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுபவர்களுக்கு விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை!

Reply Rate this
பிப் 17, 2026 04:10 pm

நயினார் பேசியது தவறாக இருக்கலாம்! இது போன்ற பேச்சுகள் எதனால் வருகின்றன? 41 பேர் மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற முடியவில்லை. ஆனால் உடன் நடித்த நடிகையின் திருமணத்திற்கு தனி விமானத்தில் மும்பை பறந்து சென்று வாழ்த்துகிறார். தனிப்பட்ட நடிகர் விஜய் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! பொது வாழ்வுக்கு வந்து அதுவும் நேரடியாக நான் முதலமைச்சராகத்தான் வருவேன் எனக் கூறுபவர் அதற்கு தகுந்தார் போல்தான் நடந்து கொள்ள வேண்டும். இதிலும் சம்மந்தப் பட்டவர்கள் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை பொய்யானதைக் கூறுகிறார்கள் எனக் கூறவில்லை தனிப்பட்ட விசயங்களைப் பேசாதீர்கள் என்றுதான் கூறுகிறார்கள். நயினார் செய்த தவறு ஒரு தனிப்பட்ட நடிகையின் பெயரைக் குறிப்பிட்டதுதான். பொது வாழ்க்கைக்கு வந்தால் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்ளத்தான் வேண்டும். நடிகர் விஜய் நயினார் பேசியது தவறு என இது வரை ஏன் நேரடியாக கண்டிக்கவில்லை? மற்றவர்கள் பின்னால் ஏன் ஒளிந்து கொள்கிறார்?

Reply Rate this
பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிறுமைப் படுத்துவது. அடிமட்ட பேச்சாளர் பேசுவது.
பிப் 18, 2026 09:37 am
Rate this
பிப் 17, 2026 03:49 pm

நயினார் விமர்சித்தது - விஜய் அவர்களைத்தான். - திரிஷா அவர்களை அல்ல.

விஜய் ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு போட்டி இடும் அரசியல்வாதி.

அவரது தினசரி நடவடிக்கைகள் - இந்திய நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் இவற்றுக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.

விஜய் தமிழ்நாட்டு நேரு ஆகவேண்டுமா?

Reply Rate this
விஜயை விமர்சனம் செய்வது என்றால் அண்ணாமலை செய்தது போல இதே விஷயத்தை பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருக்கலாம். உறுதிப் படாத தகவல்களின் அடிப்படையில் திரிஷாவை சிறுமைப் படுத்தி இருக்க வேண்டாம்.
பிப் 18, 2026 12:06 pm
Rate this
பிப் 17, 2026 03:37 pm

கே டீ ராகவன் நிலைமை பற்றி லாம் நைனார் மறந்துட்டாரு போல ...

Reply Rate this
பிப் 17, 2026 01:49 pm

தேவையா இதெல்லாம் .?

Reply Rate this
பிப் 17, 2026 01:22 pm

ஒருவன் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்கள் விமசிரிக்கக்கூடாது, விமரிசிக்க முடியாது...என்பது மிகவும் சரி.. ஆனால் அது அவன் சாதாரணமான பொதுஜனமாக இருக்கும் வரை மட்டுமே. பொதுவாழ்க்கைக்கு அதுவும் ஒரு தலைவனாக, நாட்டை வழிநடத்துபவனாக, நிர்வாகம் செய்பவனாக ஒருவன் வருகிறான் அல்லது வரநினைக்கிறான் என்றால் அப்படி வரும் நபரிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க வேண்டுமா இல்லை கூடாதா.. குடிக்கலாம்.. ஆடம்பரமான உல்லாச வாழ்க்கை வாழலாம்.. எங்கு இருக்கிறோம் என்று வெளியே தெரியாமல் திடீர் திடீர் என்று வெளிஉலகத்தில் இருந்து மறைந்து / மறைத்துக்கொள்ளலாம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா? அப்படிப்பட்டவன் தலைவன் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளலாமா என்றால் அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.. மேற்கத்திய நாடுகளில் மக்களின் தனிப்பட்ட உறவுகள், மற்றும் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்தாலும்... தங்களை ஆளும் அல்லது ஆளுவிரும்பும் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பரிசுத்தமாக வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்கவேண்டும் என்று கொள்கை வகுத்து வைத்து இருக்கிறார்கள். இது இங்கும் அனைவருக்கும் பொருந்துமா பொருந்தாதா? இதை பற்றி எல்லாம் பேசலாமா? பேசக்கூடாதா என்பதை சட்டங்களை நன்கு அறிந்த அறிஞர்கள்தான் சொல்லவேண்டும்...

Reply Rate this