Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்பு; அ.தி.மு.க., 'மாஜி' முதல்வர் தகவல்

தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்பு; அ.தி.மு.க., 'மாஜி' முதல்வர் தகவல்

சென்னை: ''தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்பு உள்ளது,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மீண்டும் அந்த கட்சியில் இணைய முயற்சித்தார். அதை அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி ஏற்கவில்லை.
பா.ஜ.,வும் அவரை கைவிட்டது. இதனால், அவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார். அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தனிக்கட்சி துவக்கி உள்ளார். இந்நிலையில், பன்னீர்செல்வம் த.வெ.க., அல்லது தி.மு.க., உடன் கூட்டணி அமைப்பார் அல்லது தி.மு.க.,வில் இணைவார் என, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், நேற்று சட்டசபை வளாகத்தில், முதல்வர் ஸ்டாலினை, பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், செய்தியாளர்கள் கேள்விக்கு பன்னீர்செல்வம் அளித்த பதில் விபரம்:

முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததற்கான காரணம் என்ன?
தி.மு.க.,வின் ஐந்தாண்டுகால ஆட்சி, இன்று சிறப்பாக நிறைவு பெற்று உள்ளது. அதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்.

'முதல்வர் ஸ்டாலின், மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்' என, உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசி உள்ளாரே?
தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனரோ, அதை அவர் கூறியுள்ளார். இன்று இருக்கும் அரசியல் சூழல் மற் றும் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி மற்றும் நாட்டுக்கு அவர்கள் செய்த சாதனைகள் எல்லாம், மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. அதனால், மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடிய வாய்ப்பு, தி.மு.க.,வுக்கு உள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றீர்களே?

தமிழகத்துக்கே வழி பிறந்துள்ளது.


தி.மு.க.,வில் இணைவீர்களா?
பொறுத்திருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் மீண்டும் முதல்வர்

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விருப்பம் உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான அய்யப்பன் சட்டசபையில் பேசியதாவது: பெரும்பாலான தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு, காலையில் சுடச்சுட உணவு கொடுப்பரா என்று தெரியாது.

ஆனால், ஆரம்ப பள்ளிகளுக்கு வரும் பிஞ்சு குழந்தைகளுக்கு தாயாக இருந்து, முதல்வர் ஸ்டாலின் சுடச்சுட, காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தி.மு.க., அரசு, மகளிருக்கு 5,000 ரூபாய் கொடுத்துவிட்டது என, கூப்பாடு போட்ட தலைவர்கள், இந்த திட்டத்தை பாராட்டவில்லை; பாராட்ட அவர்களுக்கு மனமில்லை.

எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை, இன்றும் நாம் பேசுகிறோம்; நாளையும் பேசுவோம். அதேபோல், தமிழ் சமுதாயம் இருக்கும் வரை, காலை உணவு திட்டம் தந்த முதல்வரை அனைவரும் பாராட்டிக் கொண்டே இருப்பர். வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும்.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆசியுடன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகளுடன் மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

பிப் 21, 2026 01:04 pm

உண்மையான அதிமுக தொண்டன், ஜெ விசுவாசி, எம்ஜிஆர் ரசிகன் இப்படி ஒரு மோசமான , மட்டமான செயலை கட்சிக்கு எதிராக செய்யமாட்டான். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் தேனி பகுதி பக்கம் சென்றுவந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பகுதி முன்பு எப்படி இருந்தது , இப்போது எப்படி இருக்கிறது என்று அவர்களுக்கு புரியும். ஊழலில் வந்த பணம், பினாமி நடவடிக்கைகளில் வந்த பணம் எப்படி எல்லாம் நகை கடைகளாகவும் துணிக்கடைகளாகவும் ஹோட்டல் லாட்ஜ் போன்றவைகளாகவும் மாறி ஊரை வளமாக்கி உள்ளது என்று நன்றாக தெரியும். அந்த ஊரில் பெரிய தொழிற்சாலை இல்லை. விவசாயம் தான் முக்கிய தொழில். பெரிய குளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோடு இவற்றை பார்த்தால் புரியும். மதுரையை விட தேனி காஸ்ட்லீ ஆகிவிட்டது. இதெற்கெல்லாம் காரணம் யார் என்பதை இந்த செய்தியை படிப்பவர்களுக்கு சொல்லவேண்டியதில்லை. அடுத்த ஆட்சி மாறினால் தன்மீது வழக்குகள் பாயலாம் , அதற்குள் . தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ ஒரு ராஜ்யசபா பதவி கிடைத்துவிட்டால் ஏதாவது காப்பாத்தலாம் அல்லது தப்பிக்கலாம் என்ற முன்னெச்செரிக்கையோ என்னவோ ? பணம் எப்படியெல்லாம் பாடாய்படுத்துகிறது பாருங்கள்

Reply Rate this
பிப் 21, 2026 12:08 pm

சோறுதானே திங்குறே

Reply Rate this
பிப் 21, 2026 11:51 am

சோறுதானா?

Reply Rate this
பிப் 21, 2026 11:49 am

வளைந்தே விட்டானய்யா தர்ம யுத்தம் புகழ்.

Reply Rate this
பிப் 21, 2026 11:25 am

இன்னும் சென்னையிலேயே வா இருக்கிறார். எப்போது எடப்பாடி கதவை சாத்திவிட்டாரோ அப்போதே தேனிக்கு சென்று டி கடையை பார்த்துக்கொண்டுஇருக்காமல் தினம் ஒரு அறிக்கையை விட்டுக்கொண்டு நானும் இருக்கிறேன் என்று சொல்கிறார்போல் தெரிகிறது. பேசாமல் நீங்களும் பண்ருட்டிபோல் ஒரு கட்சியை ஆரம்பிக்கலாமே. சேர்த்த காசை வைத்துக்கொண்டு சொச்ச நாளை சொந்த ஊரில் போய் அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் இந்த வேண்டாத வேலை. கொஞ்ச நஞ்ச மரியாதையும் இனிமேல் போய்விடும்.

Reply Rate this
பிப் 21, 2026 10:10 am

எம்ஜிஆரால் 13 ஆண்டுகள் பின்னர் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் ஒழித்துக்கட்டப்பட்ட திமுகவை ஆதரிக்கும் பன்னீர் ஆண்டவனால் கடும் தண்டனைக்கு உள்ளாவது உறுதி.

Reply Rate this
பிப் 21, 2026 10:09 am

உங்கமேலே இருந்த கொஞ்ச நஜ்ஜம் இருந்த மதிப்பும் மதிப்பும் போயிடுச்சி.

Reply Rate this
இவனுக்கெல்லாம் மதிப்பு கொடுத்தது உங்க தப்பு
பிப் 21, 2026 03:59 pm
Rate this
பிப் 21, 2026 10:03 am

ஆமா எடப்பாடி மாதிரி ஒரு சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ல இருந்து கடைக்கொடி தொண்டன் வரை திமுக & தவேக பொய் விடுவர்கள் அப்புறம் எடப்பாடியும் அவர் குடும்பமும் தான் அதிமுக ல இருப்பார்கள்

Reply Rate this
போயி வேற வேல இருந்தா பாரு...அஇஅதிமுக பற்றி அதன் தொண்டர்கள்தான் சொல்லனும்.இந்த மிச்சர சசி பொடறியில் கொடுத்து ராஜினாமா கடிதம் வாங்கியது இப்பதான் புரியுது..கபடகாரன் ஓபிஎஸ்.
பிப் 21, 2026 12:11 pm
Rate this
பிப் 21, 2026 09:06 am

தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை … எடப்பாடிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும்.. என்ற ஆதங்கம்.

Reply Rate this
பிப் 21, 2026 08:23 am

சிவா சேனா மட்டுமல்ல, என் சி பி ஐயும் கூட உண்டு இல்லை என்று ஆகியது பாஜக. திமுகவையும் அதே போல ஆக்க வேண்டும்.

Reply Rate this
அதற்கு வாய்ப்பு இல்ல ராஜா
பிப் 21, 2026 10:06 am
Rate this
ramesh - chennai
ஒன்றும் செய்ய முடியாது
பிப் 21, 2026 10:12 am
Rate this