Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை வைத்தே திருமாவளவனுக்கு தி.மு.க., நெருக்கடி

விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை வைத்தே திருமாவளவனுக்கு தி.மு.க., நெருக்கடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'தி.மு.க., தரும் தொகுதிகளை மட்டும் வாங்கி கொள்ளலாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், வி.சி.,களுக்கு ஆறு தொகுதிகளை மட்டுமே தி.மு.க., வழங்கியது. கடந்த லோக்சபா தேர்தலில், தனி சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வென்று, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, கட்சி வளர்ந்து இருக்கிறது.

அதன்படி, சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல், தி.மு.க., கூட்டணியில் வாங்க வேண்டும் என்பதுதான் வி.சி., நிர்வாகிகளின் ஆசையாக இருக்கிறது. அதைத்தான், திருமாவள வனும், தி.மு.க.,விடம் கேட்கிறார்.

ஆனால், தி.மு.க., வோ தங்களுக்கு நெருக்கமான வி.சி., நிர்வாகிகளை வைத்தே, திருமாவளவனுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கிறது.

வி.சி., - எம்.பி., ரவிகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சிந்தனைச்செல்வன், ஷா நவாஸ், பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு என, மூத்த நிர்வாகிகள் பலரும் தி.மு.க.,வுடன் நெருக்கமாக இருக்கின்றனர்.

முதல்வரோடும், மூத்த அமைச்சர்களுடனும் அன்றாடம் பேசுகின்றனர். அவர்களுக்கு தேவையானதை ஆட்சியாளர்கள் வாயிலாக பெறுகின்றனர். இதனால், அவர்கள் வி.சி.,யில் இருப்பதை மறந்து, தி.மு.க.,வினராகவே மாறி விட்டனர். ஏற்கனவே, ஆட்சியில் பங்கு கேட்டு, தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுத்த ஆதவ் அர்ஜுனாவை, இந்த நிர்வாகிகளை வைத்துதான், வி.சி.,யில் இருந்து தி.மு.க., வெளியேற்றியது.
அதேபோல், தற்போது அதிக தொகுதிகளை கேட்கும் திருமாவளவனுக்கு, 'ஆறு அல்லது எட்டு தொகுதிகளே நமக்கு போதும். தி.மு.க., என்ன கொடுக்கிறதோ, அதை வாங்கிக் கொள்ளலாம்' என, அவரது கட்சியில் உள்ள இந்த நிர்வாகிகளை வைத்தே, தி.மு.க., நிர்ப் பந்தம் கொடுக்கிறது.
பா.ம.க., நிறுவனர் ராமதாசை கூட்டணிக்குள் கொண்டு வர தடை போடும் திருமாவளவனுக்கு, இந்த நிர்வாகிகளை வைத்தே, நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ஒருவேளை, தொகுதி பங்கீட்டில் திருமாவளவன் முரண்டு பிடித்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடைக்கவும் தி.மு.க., தயங்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement

பிப் 13, 2026 10:10 am

விசிக கட்டை பஞ்சாயத்து ரவுடியிசத்திற்கு பேர் போனவர்கள். பணத்தை பார்த்தால் எலும்பு துண்டுக்கு அலையும் வளர்ப்பு பிராணிகளாக மாறி விடுவார்கள். பிறகென்ன இப்படித்தான் இருக்கும்

Reply Rate this
நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை... அடிமை அல்லக்கைகளை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது ரவுடிசம் செய்வது கட்சி வளர்க்க உதவுகிறது. மானங்கெட்ட மக்கள் ஓட்டு போடுவது இதன் சிறப்பு
பிப் 13, 2026 06:41 pm
Rate this
பிப் 13, 2026 09:28 am

எல்லாமே கொள்ளிகள். இதில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி .

Reply Rate this
பிப் 13, 2026 09:23 am

Ban Casteist Divisive Destructive Policyless AntiNation AntiNativePeople Suitcase Parties

Reply Rate this
பிப் 13, 2026 08:05 am

திமுக வால் பதவி அடைந்தவர்கள் திமுகவுக்கு ஆதரவாகத் தான் இருப்பார்கள். கொத்தடிமைகள் பேச முடியாது. திருமா வீரவசனம் மட்டுமே பேச முடியும்.

Reply Rate this
பிப் 13, 2026 07:50 am

விசிகே கட்சி ஏற்கெனவே திமுக கட்சியின் ஒரு பிரிவாக மாறி ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.... அதனால் இனிமேலும் கட்சியை உடைக்க ஒன்றும் இல்லை.

Reply Rate this
பிப் 13, 2026 06:20 am

இப்படி ஒரு நிகழ்விற்கு வாய்ப்பு குறைவே

Reply Rate this