கூடுதல் பிரமாணப் பத்திரம்; தாக்கல் செய்தார் விஜய்
சென்னை: பெரம்பூர் தொகுதியில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தவெக தலைவர் விஜய் இன்று தாக்கல் செய்தார்.
சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் சமர்ப்பித்து உள்ளார். பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் குற்ற வழக்கு இல்லையென விஜய் தெரிவித்து இருந்தார்.
திருச்சி கிழக்கிற்கான வேட்புமனுவில் பெரம்பூர் பிரசாரத்தின் போது மார்ச் 30ம் தேதி ஒரு வழக்கும், 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் சமர்ப்பித்துள்ள வேட்புமனுக்களில் இவ்வாறு மாறுப்பட்ட, முரண்பட்ட தகவல்கள் இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை விஜய் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில், 2025ம் ஆண்டு மதுரை மாநாடு தொடர்பாக விஜய் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் கொளத்தூரில் பிரசாரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த விபரங்களை சேர்த்துள்ளார்.
அதேபோல, இரு பிரமாண பத்திரங்களிலும் வயதில் இருந்த வேறுபாடு தொடர்பான மாற்றமும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா
அது திரும்பவும் வராம பாத்துக்கோ..
கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது...
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே பாப்பா திருடாதே
என்ன ஆரம்பத்துலேயே... தடங்கலா இருக்கு...? புதுசா வந்தவன்களை நம்பி... அரசியல் களத்தில் இறங்குனா இந்த கதிதான்...? நமக்குத்தான் எல்லாம் தெரியும்னு ஆடுனா... கால் ஸ்லிப் ஆகி விழுந்து கால் சுளுக்கு புடிச்சிக்கும்... அனுபவம் உள்ள ஆளுங்கள பக்கத்துல வச்சிக்கணும்... உனக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது... சுயபுத்தியும் கிடையாதே... அது உனக்கு மட்டுமா... உன்கூட இருக்குற அல்லக்கை, நொள்ளகை..க்கும் கிடையாதே...?
அரசாள நினைப்பவர் ஒரு பிரமாண பத்திரம் இந்த நிலை, இதில் நான் mgr என்று கூறியுள்ளார்

முழு படிப்பறிவு இல்லாததால் தவெக ஜோசப் விஜய் மற்றவர்கள் எழுதிதந்த பிரமாண பத்திரங்களை பல தடவை திருத்தி சமர்ப்பிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.