Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: அமைச்சர் ஆலோசனை வழங்கல்

 தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: அமைச்சர் ஆலோசனை வழங்கல்

விழுப்புரம்: தி.மு.க., சார்பில் நடந்த வானுார் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானுார் தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பான 'தமிழ்நாடு தலைகுனியாது' தேர்தல் பிரசார தொடர் நிகழ்ச்சிகள் கண்டமங்கலத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில், மண்டல பொறுப்பாளர் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினார்.

கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், வானுார் தொகுதி பொறுப்பாளர் மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் வாசன் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, கண்டமங்கலம் கடைவீதியில், தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பின், அம்பேத்கர், அண்ணா துரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் மூத்த முன்னோடிகளை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர். கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement