Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அ.இ.ஜ.பா.க., ராமதாசின் புது கட்சி

 அ.இ.ஜ.பா.க., ராமதாசின் புது கட்சி

சென்னை: தன் மகன் அன்புமணி, மருமகள் சவுமியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கட்சி ரீதியாக சில நடவடிக்கைகளை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எடுத்தார். ஆனால், பா.ம.க., தலைவராக அன்புமணி நீடிப்பார்; மாம்பழம் சின்னம் அவருக்கே சொந்தம் என்பதை, நீதிமன்றம் உறுதி செய்தது.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, பா.ம.க., போட்டியிடுகிறது. அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணியில் இணைய, ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சசிகலா துவங்கிய அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன், ராமதாஸ் கூட்டணி அமைத்தார். பல தொகுதிகளில் வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளார்.

இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற புதிய கட்சியை ராமதாஸ் துவக்கியுள்ளார். அக்கட்சி சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்வதற்கு, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.

அக்கட்சி நட்சத்திர வேட்பாளர் பட்டியலில், ராமதாஸ், ஜி.கே.மணி, ஸ்ரீகாந்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் உட்பட, 20 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement