Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தமிழக சட்டசபை தேர்தல்: வெளிமாநில நிர்வாகிகளை களமிறக்கிய பா.ஜ.,

தமிழக சட்டசபை தேர்தல்: வெளிமாநில நிர்வாகிகளை களமிறக்கிய பா.ஜ.,

சென்னை: பா.ஜ., வெற்றிக்கு செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு, கட்சி பார்வையாளர்களுக்கு, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் அறிவுறுத்தி உள்ளார்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மேலும், சிறிய கட்சிகளை, தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கவும் முடிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் 57 தொகுதிகளுக்கு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த 57 பேரை, பார்வையாளர்களாக பா.ஜ., நியமித்துள்ளது. அவர்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

இதில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


சந்தோஷ் பேசியுள்ளதாவது: ஒவ்வொரு பார்வையாளரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், தி.மு.க., அரசு மற்றும் மத்திய அரசு குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டு மேலிட தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

தி.மு.க., அரசுக்கு எதிராக என்னென்ன பிரச்னைகள் குறித்து அதிகம் பேசுகின்றனர்; மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன; எந்த பகுதியில் மதத்திற்கும், ஜாதிக்கும் அதிக முக்கியத்துவம் தருகின்றனர் போன்ற விபரங்களையும் திரட்டி அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.

Advertisement

இங்க நோட்ட சொருவினா எல்லாம் வேகும்

Reply Rate this
மார் 07, 2026 11:30 am

வடமாநிலங்கள் போல தமிழ்நாட்டில் அவங்க பருப்பு வேகாது

Reply Rate this