Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 23 அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

 23 அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், 23 தொகுதிகளுக்கான அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

அ.தி.மு.க., வேட்பாளர்களில், 21 பேர் முன்னாள் அமைச்சர்கள். சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதியில், எட்டாவது முறையாக பழனிசாமி களமிறங்குகிறார். இந்த தொகுதியில் கடந்த 1989, 1991, 1996, 2006, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட அவர், ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2021 தேர்தலில் விழுப்புரத்தில் தோற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், இந்த முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக பா.ம.க., தலைவர் அன்புமணி ஆதரவாளரான சிவகுமார் இருக்கிறார். இந்த நிலையில், அங்கு அ.தி.மு.க., போட்டியிடுகிறது.

இதே போல, கடந்த 2021 தேர்தலில் ராஜபாளையத்தில் தோற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசியிலும்; கடந்த முறை போளூரில் வென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இப்போது கலசப்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.

ஜெயலலிதா இருந்தவரை, பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். முதல் வேட்பாளர் பட்டியலில் கண்டிப்பாக பெண்கள் இடம்பெறுவர். ஆனால், நேற்று பழனிசாமி அறிவித்த 23 பேரில், பெண்கள் யாரும் இல்லை.

Advertisement