Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜயை பயன்படுத்தி ஓட்டுகளை பிரிக்க திமுக முயற்சி: பியூஷ் கோயல்

விஜயை பயன்படுத்தி ஓட்டுகளை பிரிக்க திமுக முயற்சி: பியூஷ் கோயல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : மக்களின் செல்வாக்கை இழந்துவிட்ட திமுக, விஜயை பயன்படுத்தி ஓட்டுகளை பிரிக்க முயற்சி செய்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிறப்பான பிரசாரம் துவங்கியுள்ளது. பாஜ வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். களத்தில் உற்சாகம் நிலவுகிறது. தேச விரோத மற்றும் தமிழக விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். தேஜ கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கும். மாநில மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சியை வழங்குவோம்.

இந்த தேர்தலில், தேஜ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டியிருக்கும். மக்களின் செல்வாக்கு இழந்துவிட்டோம். மக்கள் தோற்கடிக்க முடிவு செய்துவிட்டனர் என்பதை திமுக புரிந்து கொண்டுள்ளது. இதனால் விஜயை முன்னிறுத்தி, திமுக எதிர்ப்பு ஓட்டுகளையும், மக்களின் கோபத்தையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.

மக்கள் மிகவும் புத்திசாலிகள். தங்களுக்கு எது நல்லது தேவை என்பதை புரிந்து கொள்வார்கள். அவர்கள் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள். தேஜ கூட்டணிக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Advertisement

ஏப் 05, 2026 10:23 pm

எனக்கு தோன்றுவது 2006 இல் விஜயாகத்துக்கு நடந்ததுதான் 2026 இல் விஜயிக்கு நடக்கும் .

Reply Rate this
ஏப் 05, 2026 06:22 pm

சைமன் மற்றும் ஜேக்கப் விஜய் திராவிட கைகூலிகள்...திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து உதய நிதி முதல்வர் ஆக வேலை செய்பவர்கள்... ஜாக்ரதை மக்களே . நம் ஓட்டை பிரிக்க விட வேண்டாம். முதலில் திமுக ஒழிப்பு...பின்பு மற்றவை...

Reply Rate this
ஏப் 05, 2026 06:21 pm

சைமன் திருட்டு திமுகவின் நீண்ட நாள் பீனாமீ பி டீம்...திமுகவை திட்டுவது போல நடித்து திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து அவர்கள் திருடும் காசில் பங்கு போட்டு கொள்வார்கள். இப்போ முட்டு கொடுத்து வாழ்க்கை யை ஓட்டுகிறார்கள்.

Reply Rate this
ஏப் 05, 2026 06:20 pm

திமுக பி டீம் ஜேக்கப் விஜய்...மிச நரி- சபரிசன் - உதயநிதி கூட்டு தயாரிப்பு த.வெ.க 1000 கோடி பட்ஜெட் ... திமுக வை திட்டுவது போல நடித்து திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து திமுக ஆட்சிக்கு வர நாடகம்...கமலஹாசன் வழியில் ...புரிந்தவர் பிஸ்தா

Reply Rate this
ஏப் 05, 2026 05:51 pm

விஜய் வெற்றி பெற முடியாது. ஓட்டை பிரிக்க முடியும். முக்கிய கட்சிகள் ஆதரவு இல்லை தேர்தலில் படு தோல்வி என்றால், பனையூர் திராவிடர் கையில் சென்று விடும். ரசிகர், மக்கள், தயாரிப்பாளர் செல்வாக்கு மிகுந்த ரஜினி, மாறன் கோஷ்டியிடம் விடுபட அரசியலை விட்டு ஒதுங்கினார்? மம்தா, ஸ்டாலின் கோஷ்டி ஆளும் அல்லது எதிர்க்கட்சி ஆனாலும் நீதி, நிர்வாக ஆதரவு மற்றும் நிழல் உலக குழுக்கள் ஆதரவு உண்டு. இது இல்லாத போது விஜய் பிஜேபியிடம் சரணடைவது மேல். ரெட் செயின்ட் விஜய் வளர்ச்சியை விரும்பாது. விஜய் உழைப்பை பாதுகாக்க தேர்தலுக்கு முன் அரசியல் முடிவு எடுக்க வேண்டிய அவசியம். ஒரு வேளை முதல்வர் ஆனாலும் நிலைக்க முடியாது.?

Reply Rate this
ஏப் 05, 2026 05:37 pm

வீண் பழி விஜய் மீது போடா தீர்கள். அதீமுகா என்ற பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பார்த்த கதை போல் அல்லவா இருக்கு.

Reply Rate this
ஏப் 05, 2026 05:36 pm

நீங்கள் எல்லாம் தி மு க வின் பி டீம். 26 சீட்டில் 1 இருந்து 5 சீட்டு கிடைக்கும். வாய்ப்பில்லை ராஜா பீகார் மாதிரி நினைக்க வேண்டாம். தமிழகம் தனி களம்.

Reply Rate this
ஏப் 05, 2026 05:25 pm

கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தெரியும் இது ஒரு பிரதான கட்சியின் பி டீம் என்று. தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலின் பொழுதும் சினிமா நடிகர்களை வைத்து புது கட்சி ஒன்றிணைத் தொடங்கி ஓட்டினை பிரிப்பது மற்றும் உள்ளடி வேலைகள் நடத்துவது என்பது ஒரு அணுகுமுறை.

Reply Rate this
ஏப் 05, 2026 05:09 pm

நீங்களும் முயற்சி பண்ணி டிபாசிட் வாங்கப் பாருங்களேன்...

Reply Rate this
ஏப் 05, 2026 05:02 pm

திருட்டு தீயமுக காரனுங்க இந்த ஆக்டர் விஜய்ய பாத்து எங்க ஓடி ஒளியலாம்ன்னு இடம் தேடிக்கிட்டு இருக்கானுங்க. ஆக்டர் தான் இவனுங்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்குறானே.அதுனாலதானே பாஜக மேல பழியை போட்டுட்டு ரூ 5000 அர்த்த ராத்திரியில் மகளிர் கணக்குல வரவு வச்சானுங்க. ஆக்டர் வெளுத்து வாங்குனதால நடு நடுங்கி போயிறுக்கானுங்க. இவனுங்க எங்க ஆக்டர் கிட்ட பேசி ஓட்டை பிரிக்குறது?

Reply Rate this