ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், ஆறு தொகுதிகளுக்கு, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, கடந்த 21ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 44 )
இவர் கட்சியை ஆதரிக்கும் ஆறு பிராமணர்கள் எங்கிருந்து எப்படிக் கிடைத்தார்கள் என்பது தான் புரியவில்லை?
உயர் திரு சீமான் அவர்களை ஆதரிக்கும் இந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மற்ற காட்சிகளை விட அதிகம். எப்படி நமது மான்புமிகு முன்னாள் முதல்வர் உயர் திரு சி என் அண்ணாதுரை அவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சினிற்கு இந்த சமூகத்தில் பலர் லயித்து ரசிகர்களாக இருந்தார்களோ அந்த அளவிற்கு திரு சீமான் அவர்களின் தமிழ் பேச்சிற்கு இந்த சமூகத்தில் ரசிகர்கள் அதிகம்.
அஞ்சு கட்சி அமாவாசை சே.. இவருக்கும் ப்ராம்மணருக்கும் சம்பந்தம் இல்லை...
கிறுத்தவ ஓட்டுக்கள் மொத்தமாய் நடிகரின் கிறுத்தவ முன்னேற்ற கழகத்திற்கு போய்விடும். இவனிடம் இருந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் ஓட்டுக்களும் அங்க போய் விடும். என்ன செய்வான், பாவம்யா, திக்குதிசை தெரியாமல் அலைகிறான்.
ஓட்டுக்கு சீட்டா... திரள்நிதிக்கு சீட்டா...ன்னா கட்சியே திரள்நிதியில தானே ஓடுது...அப்ப திரள்றதுக்கு தானே சீட்டு
சீமானும் விஜயும் இனைய வேண்டும் , கூட்டணியில் அண்ணாமலையும் இணைந்திருக்கலாம்
ஒரே சபைக்கு வரமாட்டார்கள், வெவ்வேறு சபைக்காரர்கள் ஒத்து வராது.
அது என்ன பிராமணர்களின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டும் என்பது? அதுதான் இடவொதுக்கீடு உள்ளதே? அதில் திறமையை காட்டி, வொதுக்கீட்டிலும் மேலே வரமுடியவில்லை என்றால் அது யார் குற்றம்? அது தவிர, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பிறகு, மற்ற எந்த பிரிவினரும் தங்கள் வாரிசுகளை அர்ச்சகர் பள்ளிகளில் சேர்க்கவில்லையே, ஏன்? திராவிட அடிவருடிகள்/திராவிடம் தூக்கி பேசுவோர், இங்கு கருத்து எழுதுவோர் மற்றும் திராவிட MLA/MP/ அமைச்சர்களின் வாரிசுகளை அர்ச்சகர் பள்ளிகளில் சேர்க்க என்ன தயக்கம்? இதை அங்கு கேட்பதை விட்டுவிட்டு, வீணாக இங்கு பிராமணர்களின் தரத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? திறமை என்பது போட்டி போட்டு, வளர்ச்சியை காட்டத்தான். முடியவில்லை என்றால், ஒதுங்கவேண்டும். குறை கூற கூடாது. எந்த பிராமணரும் இப்படி ஒப்பாரி வைப்பதில்லை.
"இடஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்கான முழுமையான தீர்வு அல்ல அது பின்தங்கியவர்களை மேலே கொண்டுவருவதற்கான ஒரு குறைந்தபட்ச நடவடிக்கை மட்டுமே. இன்றும் நீதித்துறையிலும் Judiciary, வெளியுறவுத்துறையிலும் External Affairs உயர் வகுப்பினரின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதை மறுக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே அதிக அறிவு/மூளை உள்ளது என்பதை ஏற்க முடியாது. இது அவர்களுக்குக் காலம் காலமாக அமைத்துத் தரப்பட்ட வாய்ப்புகளின் விளைவுதானே தவிர, பிறப்பால் வந்ததல்ல. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்குப் பிறகு, பலர் அர்ச்சகர் பள்ளிகளில் படித்து முடித்துத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் பெரிய கோவில்களில் பணியமர்த்தப்படவில்லை என்பதே நிதர்சனம். எனவே யாரும் சேரவில்லை, யாரும் வரவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, இல்லையா? யாரும் வரவில்லை என்பது உண்மை அல்ல . கடைசியாக, எந்தப் பிராமணரும் குறை சொல்வதில்லை என்பதும் உண்மையில்லை. தங்களுக்குப் பாதிப்பு வரும்போது அவர்களும் குரல் எழுப்பவே செய்கிறார்கள். திறமை என்பது அனைவருக்கும் பொதுவானது வாய்ப்பு மறுக்கப்படுபவர்களைப் பார்த்து திறமை இல்லை என்று சொல்வது நியாயமல்ல."
ப்ராஹ்மின்ஸ் வோட்டர்ஸ் 7 பிசிட் மாஸ்டலி இன் சவுத் சென்னை, திருச்சி ஸ்ரீரங்கம் , கும்பகோணம், தஞ்சாவூர் , தென்காசி , மதுரை. 7 பிசிட் ஓட்ஸ் இம்போர்ட்டண்ட் போர் ஆல் பார்ட்டிஸ்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஆயுதம் எடுத்துள்ளார் சைமன் வழக்கம் போல திமுக க்கு தான் இவர் அரசியல் மறைமுகமாக உதவும் எவ்வளவு வாங்கினார் என்று தெரியவில்லை
What about your bro
நல்லது. பார்க்கலாம் .