/ செய்திகள் / கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்; 5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்; 5 தொகுதிகள் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர். தேர்தலில் போட்டியிட 5 தொகுதிகள் தருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., - வி.சி., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித் தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க.,வும் இணைந்துள்ளது.இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த, தி.மு.க., பொருளாளர் பாலு தலைமையில், அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலர்கள் சிவா, ராஜா, அமைப்பு செயலர் பாரதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.முதல்நாளான இன்று (பிப்ரவரி 22) தொகுதி பங்கீடு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளுடன் 7 பேர் கொண்ட திமுக குழுவினர் பேச்சு நடத்தினர்.5 தொகுதிகள் கேட்டோம்!திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த பிறகு காதர் மொய்தீன் கூறியதாவது: திமுகவிடம் 5ம் தொகுதிகள் கேட்டுள்ளோம். 5 தொகுதிகள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 4 தொகுதிகள் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். கடந்த தேர்தலில் கொடுத்த 3 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள திமுக வலியுறுத்தி உள்ளது. 3 தொகுதிகளில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க திமுக வலியுறுத்தி உள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு வருவதாக கூறியுள்ளோம். திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம். தொகுதிகள் கூடுதலாக வருகிறதோ, குறைவாக வருகிறதோ என்பது கவலையில்லை. இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.மயங்கி விழுந்தார்பேச்சுவார்த்தை முடிந்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த காதர் மொய்தீன், அண்ணா அறிவாலயத்தில் மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.மதிமுகவுக்கு நாளை அழைப்புமதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு நாளை (பிப்ரவரி 23) பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் பிப்ரவரி 26ம் தேதி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Manokaran
பிப் 22, 2026 18:25

50 சீட் தருகிறோம் என்று சொல்லியிருப்பார்கள் அதனாலதான் மயக்கம் போட்டு விட்டார்.


நிக்கோல்தாம்சன்
பிப் 22, 2026 17:07

மத சார்பற்ற கூட்டணி என்று பெயர் வைத்து விட்டு முஸ்லிம்களின் பெயர் , எங்கெங்கே உங்க மதசார்பற்ற நிலை ?


SUBBU,MADURAI
பிப் 22, 2026 17:00

நாளை அறிவாலயத்துக்கு தொகுதி உடன்பாட்டுக்கு வரும் மதிமுகவின் வைகோவிற்கு திமுக மூன்று தொகுதிகளை ஒதுக்கும் போதும் வைகோவும் அறிவாலய வாசலில் மயங்கி சுருண்டு விழுவார் என ஆவலுடன் எதிர்பார்ப்போம்.


sundararajan
பிப் 22, 2026 16:08

காசா பணமா ஒரு 50 சீட் கேளுங்களேன்.


Rahim
பிப் 22, 2026 15:38

ரமலான் நோன்பு நோற்ற சோர்வால் மயங்கி இருக்கிறார் அதையும் கேலியாக எழுதுபவர்கள் தங்கள் உள் மன எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
பிப் 22, 2026 14:39

5 கேட்டு நாலாவது கொடுங்கன்னா போன தடவை மூன்றிலும் தோல்வி அதனால் இந்த தடவை 2 தான். அதிலும் ஒன்றில் உ சூ சின்னத்திலேயே நிக்கணுமாம். இதைக் கேட்டா மயங்காம என்ன செய்வார்? பாகிஸ்தானை பிரித்த பாவம்.


Venkatasubramanian krishnamurthy
பிப் 22, 2026 13:14

காதர் மொய்தீன் மயங்கி விழும் அளவுக்கு அந்த ஏழு பேர் கொண்ட குழு ஏதோ ஏழரையாக பேசியிருக்கிறது.


Mohanakrishnan
பிப் 22, 2026 13:10

233 இல்லை 420 கவுன்சிலர்கள் உறுதி


ஆகுயர்த்தோன்
பிப் 22, 2026 12:38

கொடுப்பதை வாங்கி கொள்ளவேண்டும் அதிகம் கேட்டால் உதய சூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும், ADMK தேறாது, DMK தோற்காது 234 லட்சியம் 233 நிட்சயம்


Modisha
பிப் 22, 2026 13:31

அமைதியா இருக்காது .


சி சொர்ணரதி
பிப் 22, 2026 13:35

நீங்கள் சொல்வது மாதிரி திமுக கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொள்வர் மீதி பெட்டி கொடுப்பர் அவ்வளவு தான் திமுக தொகுதி பங்கீடு. உங்கள் தலைவர் களவு காண சொல்லியதை நீங்கள் கனவு காணுங்கள். ஆனால் அக்குழு நிறைவேறாமல் திருப்பரங்குன்றம் முருகன் பார்த்து கொள்


V K
பிப் 22, 2026 15:32

உனக்கு இருநூறு ரூபாய் நிச்சயம்


SUBBU,MADURAI
பிப் 22, 2026 17:05

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இதெல்லாம் மதச்சார்பற்ற கட்சிகளா இதற்கு முதலில் பதிலை சொல்?


vivek
பிப் 22, 2026 21:56

ஆகூர் இந்த உன் குடும்பத்துக்கு இருநூறு


ஆகுயர்த்தோன்
பிப் 22, 2026 12:36

காங்கிரஸ் ஐ ஜூன் க்கு பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்கள்