/ செய்திகள் / இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!

இழுபறி செய்த தேமுதிக; இழுத்துப்பிடித்தது திமுக!

-நமது நிருபர்- அங்குமிங்கும் மாறி மாறி பேரம் பேசி, தேர்தல் அரசியலை கேலிக்கூத்தாக மாற்றிய தேமுதிக, தன் வரலாற்றில் முதல் முறையாக இப்போது தான் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதன் தேர்தல் வரலாறு இதோ!திமுக, அதிமுகவுக்கு மாற்றாக, 2006ம் ஆண்டு விஜயகாந்தால் தொடங்கப்பட்டது தேமுதிக. கட்சி தொடங்கிய புதிதில், எல்லாக் கட்சிகளையும் விஜயகாந்த் விமர்சனம் செய்தார். இரு கட்சிகளுக்கும் மாற்று தானே என்று கூறி, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட தேமுதிக, 8.4 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.* 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.* 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.* 2014 லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. 14 தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.* 2016ம் ஆண்டு தேர்தலில் உருவான மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக தான் தலைமை வகித்தது. போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வியே கிடைத்தது. விஜயகாந்தும் தோல்வியை தழுவினார்.* 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜ இடம் பெற்ற அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும் இருந்தது. ஆனால், எந்த தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.* 2021ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது தேமுதிக. இரு கட்சிகளும் கூட்டணியில் இணைந்திருப்பது, இதுவே முதல் முறை.திமுக கொடுத்த சிறப்பு சலுகையாருடன் கூட்டணி என்பதை இப்போது சொல்வோம், அப்போது சொல்வோம் என்று சொல்லிக் கொண்டே பிரேமலதா நாட்களை கடத்திக் கொண்டே சென்றது, இணையத்தில் பெரும் விமர்சனங்களை கிளப்பியது. அதற்கு தகுந்தபடி, அதிமுக, திமுக மற்றும் பாஜ நிர்வாகிகளுடன் அந்த கட்சியினர் பேச்சு நடத்தினர். எனினும், யாருடன் பேச்சு நடத்துகிறோம் என்பதை வெளிப்படையாக ஒருபோதும் அறிவிக்கவில்லை. எல்லாமே திரை மறைவாகவே நடந்ததும், விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இப்போது தேர்தல் நெருங்கிய நிலையில், திமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இணைந்திருக்கிறது. பல மாதங்களாக கூட்டணியை அறிவிக்காமல் இழுபறி செய்த பிரேமலதா, இன்று திடீரென முடிவு செய்யும் வகையில் திமுக கொடுத்த பெஸ்ட் ஆஃபர் என்ன, சிறப்பு சலுகை என்ன என்பது, விரைவில் தெரியவரும்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 20, 2026 11:02

கேப்டனை மனதை துன்புறுத்தி கொலை செய்தவர்களோடு சென்று கூட்டணி அமைத்த சுயநல பிரேமலதாவை கேப்டனின் ஆன்மா கூட மன்னிக்காது.


Haja Kuthubdeen
பிப் 19, 2026 20:57

ஒருவழியா கொசு தொல்லை ஒழிந்தது...


Prem Kumar
பிப் 19, 2026 20:46

மற்ற அரசியல் தலைவர்களை போலவே, தி.மு.க.வோடு கூட்டணி அமைந்தது தொண்டர்களின் விருப்பம் என வாய் கூசாமல் பொய்யை பிரேமலதா கூறி அவராகவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இது தொண்டர்களின் விருப்பம் என்பது உண்மையானால் தி.மு.க. ஒதுக்கும் அணைத்து தொகுதிகளிலும் விஜய்காந்த் மற்றும் நீண்ட காலமாக கட்சியில் உறுப்பினர்- தொண்டர்களாக வாழ்க்கையை தியாகம் செய்து வருபவர் களுக்கு கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக பிரேமலதா மற்றும் அவரது மகன் இருவருக்குமே எந்த தொகுதியை ஒதுக்கி கொள்ள கூடாது. செய்வாரா?


Anbuselvan
பிப் 19, 2026 17:23

போக்கு காட்டி வரும் காங்கிரஸ் கட்சிக்கு வைத்தாட்கள் ஒரு செக். இப்போ 20 சீட்டுதான் என அடித்து பேசுவார்கள். ஆட்சியில் பங்கு காட்சியில் பங்குன்னு யாரும் வாய தொறக்க கூடாதுன்னு அடைப்பார்கள். கில்லாடி வேலை.


R.Jana
பிப் 19, 2026 16:49

இந்த கூட்டணி அசிங்கங்களுக்கு மற்றும் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் திட்டம்களுக்கு அப்பாற்பட்ட சீமான் கட்சிக்கு வோட்டை போடுங்கள்.


kjpkh
பிப் 19, 2026 19:28

சீமான் திமுகவின் பி டீம் தானே


BALAJI
பிப் 19, 2026 16:27

பாஜக குடுத்த ஆபர் வேலை செய்யவில்லை போலும்


Venkat
பிப் 19, 2026 16:12

நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும் என்ற PS வீரப்பாவின் வசனம் ஞாபகம் வருகிறது .....


duruvasar
பிப் 19, 2026 16:10

பாலசந்தர் படத்தில் கமலஹாசன் பசியின் கொடுமையால் சாக்கடையில் கிடைக்கும் ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து சாப்பிடுவதுபோல் ஒரு காட்சி வரும் .


Sundar R
பிப் 19, 2026 15:42

இனம் இனத்தோடு சேரும்.


Barakat Ali
பிப் 19, 2026 14:13

ஒருவேளை விஜயகாந்த உயிருடன் இருந்து தேமுதிக விஜயகாந்த் கையில் இருந்தால் இப்படியொரு முடிவை எடுத்திருக்க மாட்டார்... தலைமை பிரேமலதாவிடம் சென்றதால் இது அவரது சொந்த விருப்பம்.. தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி என்கிறார் பிரேமலதா.... அப்படி நாம் நினைக்கவில்லை ....