/ செய்திகள் /  அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

 அ.தி.மு.க., முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்; ஜெ., பிறந்தநாளில் வெளியிடும் பழனிசாமி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் பிப்., 24ல், சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அ.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது: வழக்கமான அரசியல் வியூகங்களுக்கு அப்பாற்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிடும் தனி பாணியை கையாண்டார் மறைந்த ஜெயலலிதா. வளர்பிறை அஷ்டமி, பஞ்சமி திதி நாளில், வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அந்நாளை பின்பற்றி வந்தார் ஜெயலலிதா. அது பல தேர்தல்களில் அவருக்கு கைகொடுத்துள்ளது. அவருடைய பாணியில் தற்போது, ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24யில், முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை வெளியிட முடிவெடுத்துள்ளார் பழனிசாமி. இந்த பட்டியலில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறுவர். ஒரு பெண்ணுக்கும் அதில் இடம் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பாகவே பட்டியலை தயார் செய்துவிட்ட பழனிசாமி, திருப்பதி சென்று பெருமாளை தரிசித்தபோது, பெருமாள் திருவடியில் வைத்து தரச் சொல்லி, அதை பெற்று திரும்பி இருக்கிறார். வரும் பிப்., 24, ஜெ., பிறந்த நாள் மட்டுமல்ல; வளர்பிறை அஷ்டமி நாளும் கூட. அதன்காரணமாகவே, அந்த நாளை தேர்வு செய்திருக்கும் பழனிசாமி, தேர்தல் தொடர்பாக, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார். இவ்வாறு அவர் கூறினர். -நமது நிருபர்-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Siddar
பிப் 18, 2026 10:07

பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் ......


Minimole P C
பிப் 18, 2026 10:07

A backstabbing guy talks of sentiments. MGR, JJ are just trademarks who used Anna as trademark.


Senthoora
பிப் 18, 2026 07:41

கஷ்டம் வரும்போதுதான் அம்மா வேணும், முடிந்தபின் வீதியில் விட்டுவிடுவாங்க.


Mahendran Puru
பிப் 18, 2026 07:19

ஜோசியத்தை நம்பி கெட்டவர் அத்வானி. அதுபோல அடுத்து இவர் வந்துள்ளார்.


vivek
பிப் 18, 2026 07:14

ஏ-1 ஐடியா.


T.sthivinayagam
பிப் 18, 2026 14:19

அதில் எத்தனை பேர் ஸிலிப்பர் செல்களாக மாறுவார்கள்.


Appan
பிப் 18, 2026 07:14

அதிமுக என்ற ஆட்சி இப்போ பொலிவிழந்து கடைசி நிலைக்கு வந்து விட்டது. அரசியலில் திறமை, ஆளுமை முக்கியம். இப்போ உள்ள அதிமுக கட்சியில் ஒருவனும் அங்கு திறமை உள்ளவன் இல்லை. உதாரணத்துக்கு இப்போ உள்ள காங்கிரசை பாருங்கள். குடும்ப அரசியலால் ராகுல் என்ற குழந்தையை தலைவராக போட்டு அவர் கட்சிக்கு மட்டுமில்லைநாட்டுக்கு மிகவும் தலைவலி கொடுக்கிறார். அதே போல் அதிமுகவில் ஒருவனும் சரியாக தமிழ் கூட பேச தெரியாதவர்கள் தான் தலைவர்களாக உள்ளார்கள். சிந்தனை திறன் இல்லாதவர்கள் நாட்டை அமெரிக்க டிரம் போல் நாசம் செய்து விடுவார்கள். டிவிக்களில் நடக்கும் விவாதங்களை பாருங்கள் .. அதிமுக காரர்கள் ஆவடி குமார், கோவை சத்யன்...கோவையாக ஒழுங்காக பேசாமல் திணறுகிறார்கள். அதே சமயத்தில் திமுக பேச்சாளர்களை பாருங்கள் புள்ளி விபரங்களுடன் பந்தாடுகிறார்கள். அதோ போக PTR பேச்சு இந்திய அளவில்பேச படுகிறது. இப்போ உள்ள திமுக ஸ்டாலின் என்ற தனி மனித திறமையை விட திமுக கட்சியின் திறமையால் தமிழகத்தை முதலிடமாக வளர்த்து உள்ளார்கள். ஒரு நாட்டுக்கு முக்கியம் பொருளாதாரம். ஏனென்றால் பசி வந்திட பத்தும் பறந்து போகும். தமிழர்களின் பெருமை தொடர அதிமுக கட்சி திமுகவுடன் சேரனும். அப்போ தான் tribal மொழியான இந்தி திணிப்பில் இருந்து விடுபட செயல் பட முடியும். அதிமுக பிஜேபியின் கூட்டு தமிழின் பெருமை அழித்து விடும் ..


Minimole P C
பிப் 18, 2026 10:05

Dont worry sir, you wish will be fulfilled, once this Dravidian theory gets outdated by the people, which is already half done, your wish of merging DMK and ADMK will definitely materialise.


Kadaparai Mani
பிப் 18, 2026 10:34

தமிழ் காட்சி மீடியா திமுக ஜால்ரா என்று எல்லோருக்கும் தெரியும். தமிழர்கள் பலர் விவாத நிகழ்ச்சியை பார்க்க தவிர்க்கிறார்கள்


Kadaparai Mani
பிப் 18, 2026 10:39

Edappadi palanisamy has far more leadership skills better than Stalin. EPS best experienced and former aiadmk ministers are powerful in districts like velumani and vijaya Baskar. On administration EPS far better than dmk and Stalin.