/ செய்திகள் / வேல் வாங்கும் உதயநிதி; எதிர்க்கட்சிகள் விமர்சனம்

வேல் வாங்கும் உதயநிதி; எதிர்க்கட்சிகள் விமர்சனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதிக்கு, நிர்வாகிகள் வேல் மற்றும் திரிசூலத்தை நினைவு பரிசாக வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கினால், மக்களை கவர அவரவர் ஒரு ஆயுதத்தை கையில் எடுப்பது வழக்கம். அந்த வகையில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் முருகன், வேலை கையில் எடுத்துக் கொண்டு, வேல் யாத்திரை நடத்தினார். பின், முதல்வர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்தினார். தொடர்ந்து சீமான், திருமாவளவன், பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் முருக கடவுளின் ஆயுதமான வேலை கையில் எடுத்தனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் உதயநிதியும் வெள்ளி வேலை கையில் எடுத்தார். இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று முன்தினம், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி கலந்து கொண்டார். அப்போது, இளைஞரணி நிர்வாகிகள் வேல், திரிசூலத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு வழங்கினர். 'தேர்தலுக்கு முன் வரை, ஹிந்து சனாதனத்தையும் ஹிந்து கடவுள்களையும் விமர்சித்து பேசுவது தி.மு.க.,வின் வாடிக்கை. தேர்தல் நெருங்கி விட்டால், ஹிந்து கடவுள்களை கையில் எடுப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். 'அந்த வகையில் தான், தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஹிந்து சனாதனத்துக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த உதயநிதிக்கு, கட்சி நிர்வாகிகள் வேல் வழங்க அதை சந்தோஷமாக பெற்றுக் கொள்கிறார். 'இதெல்லாம் வாக்காளர்களை ஏமாற்றும் வேலை. முருகக் கடவுளின் ஆயுதமான வேலை கையில் ஏந்தி மத்திய அமைச்சர் முருகன் வேல் யாத்திரை நடத்திய போது, வேலை வைத்து வன்முறைக்கு வித்திடுவதாக தி.மு.க.,வினர் குற்றம் சுமத்தினர்' என, எதிர் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Chandru
பிப் 18, 2026 19:11

சின்ன பய்யன் விளையாட்டு காண சகிக்கவில்லை


VSMani
பிப் 18, 2026 10:45

இந்து மக்களின் வாக்குகளைப்பெற வேல் வாங்குவதும் ஏந்துவதும், கிறிஸ்தவர்களைக் கண்டால் நான் ஒரு கிறிஸ்தவன் என்பதும் இஸ்லாமியர்களைக் கண்டால் தான் ஒரு இஸ்லாமியன் என்பதும் அரசியல்வாதிகளின் நடிப்பு என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் என்ன செய்வது மக்கள் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் பணத்துக்கும் வாக்களிக்கும் வரை தமிழகத்தில் எந்த நல்ல திட்டம்களும் காமராஜர் ஆட்சிபோல வராது ஆனால் கடன் மட்டும் 10 லட்சம் கோடி 20 லட்சம் கோடி என்று ஏறும். எல்லா பணம்களும் கொள்ளையடிக்கப்பட்டு ஆளும் அரசியல்வாதிகளைப்போய் சேரும். மக்கள் பாவம்.


Matt P
பிப் 17, 2026 23:43

வேல் இந்துக்களுக்கோ முருகனுக்கோ மட்டும் சொந்தமானது இல்லை. பண்டை காலத்தில் போருக்கு போகும் எல்லோரும் வேல் தான் பயன்படுத்தி கொண்டார்கள். அனால் இவர் அப்பா தளபதி, இவரு வேல் ஏந்தி போராட போறாரு. ஏன் எங்கு? செங்கலை காட்டினவரு இனிமேல் வேலை காட்டி வாக்கு கேட்டாலும் கேட்பார். கவனமா இருங்க மக்களே.


kumarkv
பிப் 17, 2026 22:13

தன்னை தானே குத்திக்கொள்ள


முருகன் அடிமை
பிப் 17, 2026 22:07

தமிழ் கடவுள் முருகனின் வேல் தெடுவதற்கு தகுதி இல்லாதவர்கள் அரசியல் நாடகம்


Venkat esh
பிப் 17, 2026 21:41

ஓட்டுக்காக வேலையும் வாங்குவார்.......... காலையும் பிடிப்பார்


T.sthivinayagam
பிப் 17, 2026 22:08

ஓட்டுக்காக வேல் ஓடியது எல்லாம் பாஜகாவினர் மறந்து விட்டீர்களா என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.


Sun
பிப் 17, 2026 21:29

வேலை கையால் தொட்டு வாங்கியவர்களுக்கு அருள் புரிவாய் முருகா! அவர்கள் மீண்டும் எதிர்கட்சியாகி மக்களுக்கு சேவை செய்யும் வேலை கொடு முருகா! அப்பவாச்சும் ஒழுங்கா வேலை செய்கிறார்களா பார் முருகா !


S. Venugopal
பிப் 17, 2026 21:19

பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை போராட்டமும் அதனால் வந்த சி ஜே ஆர் பால் கமிஷன் அறிக்கை ஆறு படை வீடுகளில் உள்ள ஒரு படை வீட்டின் வைர வேல் போன்ற நிகழ்ச்சிகள் ஞாபகத்திற்க்கு வருகிறது


ramesh
பிப் 17, 2026 20:52

இந்து மதம் சொந்தமானது என்பது போல பேசுகிறீர்கள் .


ramesh
பிப் 17, 2026 20:50

சனாதனத்தை மட்டுமே எதிர்த்து பேசினார் .