காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறி; நயினார் நாகேந்திரன் சந்தேகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: காங்கிரஸ் திமுகவுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைக்கும். சென்னை மதுராந்தகத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டம் பெரிய மாநாடாக மாறி திமுக ஆட்சிக்கு பெரிய பேரிடியாக அமைந்து இருக்கிறது. தற்போது மதுரையில் மீண்டும் நீதி கேட்டு மார்ச் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் தேஜ கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இதுவும் மாநாடாக அமையும்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மிஸ்டர் நயினார் காங்கிரஸ் தி மு க கூட்டணி இருக்குமா இருக்காதா என்ற கவலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம். பி ஜே பி சென்ற தேர்தலில் வென்ற 4 சீட்களை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அது போதும். . EPS க்கு ஜால்ரா அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். பி ஜே பி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளுக்கு EPS பிரச்சாரம் செய்ய சொல்லுங்கள். அவரு பி ஜே பி தொகுதிகளுக்கு பெபே காட்டினாலும் காட்டுவாரு.
காங்கிரஸ் திமுகவில் இருக்குமா? என்பது கேள்விக்குறி? இருந்து விட்டால், அது ஆச்சரியக்குறி?
டெபாசிட் வாங்காம இருப்பாரா என்பதே சந்தேகம் ....
திமுக வுடன் காங். கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவருக்கு எங்க வலிக்கிறது?
யார் கூட்டணியில் யார் இருப்பார்கள் என்பது முக்கியமில்லை. நயிநார் ஆபாச பேச்சசுடன் கூட்டணி வைத்துக்கொள்வது அவர்பார்ட்டிக்கு நல்லதல்ல. கூட்டணி தர்மம் என்று உருப்படியில்லாத விஷயங்களுக்காக அண்ணாமலை போன்ற மதிக்கத்தக்க தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் பார்ட்டி பெயர் மட்டுமல்ல தனிப்பட்ட அடையாளம் கொண்டுள்ளவர்களும் மதிப்பிழப்பார்கள்.
அது இருக்கட்டும், அண்ணாமலை தேர்தல் வரை கட்சியில் இருப்பாரா? வேறே விதமா வெளியே பேச்சு அடிபடுது? அண்ணாமலை இருந்தால்தான் நோட்டோ கூட போட்டி போட முடியும்
உன் கூட்டணி ரொம்ப வீக்கு அதை பலமாக்க வழியப்பாரு முதலில் அப்புறம் எதிர்கட்சியைப்பத்தி பேசலாம்
இதையே திமுகவிடம் சொல்லுங்க
இவரு தேர்தலில் நின்றால் டெபாசிட் வாங்குவாரா? உன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் நீக்கப் பாரும் அய்யா
மேலும் செய்திகள்
ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
பிப் 18, 2026 03:32 pm
எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பிரதமரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது; செல்வபெருந்தகை ஆரூடம்
பிப் 18, 2026 03:32 pm
கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை: காங்கிரசாருக்கு வேணுகோபால் எச்சரிக்கை
பிப் 18, 2026 07:14 am