/ செய்திகள் /  பஞ்சரான டயரும் பங்ஷனாகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் ஓடவே ஓடாது: உதயநிதி விமர்சனம்

 பஞ்சரான டயரும் பங்ஷனாகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் ஓடவே ஓடாது: உதயநிதி விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: “பா.ஜ., கூட்டணியில் உள்ள பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது,” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று நடந்த தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அடிக்கடி சங்கி கூட்டம் வரும்; மோடி, அமித் ஷா வருவர். தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது. உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில் மோடி, அமித் ஷாவின் பருப்பு வேகலாம்; ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் வேகாது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தலைவர்களை யோசித்து பாருங்கள். 'பழனிசாமியுடன் கூட்டணியில் இருப்பதற்கு, துாக்கில் தொங்கி விடலாம்' என ஒருவர் கூறினார். 'பழனிசாமிக்கு கவுன்சிலராக வரக்கூட தகுதி கிடையாது' என மற்றொருவர் கூறினார். இந்த கூட்டணியை வைத்துக் கொண்டு, 'தமிழகத்திற்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும்' என பிரதமர் மோடி கூறுகிறார். மோடி அவர்களே, உங்கள் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் அனைவரும் பஞ்சரான டயர்கள். உங்களுடைய பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழகத்தில் என்றைக்கும் ஓடவே ஓடாது. இவர்கள் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம், யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டியினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும், தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அரசியல் என்பது மக்கள் பணி. கமிட்மென்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. பாசிசத்தையும், அடிமைத்தனத்தையும் தி.மு.க.,வினர் விரட்ட வேண்டும். டில்லிக்கும், தமிழகத்திற்கும் நடக்கும் போரில், தமிழகம் என்றும் டில்லிக்கு தலைகுனியாது. அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டை கத்திகளும் புலம்பினாலும், வெற்றி பெறுவது உதயசூரியன் தான். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Ramki_64
பிப் 17, 2026 20:04

கோடிக்கணக்கில் கொள்ளையும் அடிக்க விட்டு இவ்வளவு திமிராக உதவாக்கரை நிதி பேசும் அளவுக்கு மத்திய பிஜேபி அரசு எப்படி இவரை விட்டு வைத்திருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது


SJRR
பிப் 17, 2026 13:28

உதயநிதியை தன்னுடைய தந்தை இந்த இடத்திற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் இவருடைய முகவரி என்னவாக இருந்திருக்கும் என்று அவருக்கே நன்றாக தெரியும். MLA என்பதே இவருக்கு ஒரு மிகப்பெரிய கனவு. ஆனால் இவரை அமைச்சராக்கி துணைமுதலைமைச்சராக்கி அவர் தந்தை அழகு பார்க்கிறார் சத்தியமாக தமிழ்நாட்டு மக்கள் அவ்வாறு எண்ணவில்லை. இவர் போய் மற்றவர்களை பஞ்சர் டப்பா என்ஜின் என்றெல்லாம் பேசுகிறார்


subramanian
பிப் 16, 2026 21:47

கீழ்நிலை தகரடப்பா மாடல்


sankar
பிப் 16, 2026 18:19

மண்டபத்துல எவனோ எழுதி கொடுத்தது


Chandru
பிப் 16, 2026 16:40

ஏன் இப்படி அசடு போல் பேசுகிறார். பேச்சிலேயே பயம் தெரிகிறது.


PATTALI
பிப் 16, 2026 16:31

இவரை போய் ஒரு மெக்கானிக் கடை வைக்கச்சொல்லி அனுப்பிவிடுங்கப்பா. ஒரு தலைவலியும் இருக்காது.


S.V.Srinivasan
பிப் 16, 2026 16:05

2026ல இருக்கு டோப்பா என்ஜினுக்கு ஆப்பு.


c.mohanraj raj
பிப் 16, 2026 15:06

பிராடுகளும் திமிர் தனமும் அரசியலில் அதிக காலம் நீடித்தது இல்லை


Rajasekar Jayaraman
பிப் 16, 2026 14:12

பாவம் தமிழக போக்குவரத்து கழக எஞ்சின் போலவே தன்னுடைய கட்சியை பற்றி சொல்லிக் கொள்கிறார்.


Vasan
பிப் 16, 2026 13:38

Doesnt look like a Honble Deputy Chief Ministers speech. Punctured tyre tube, Dubba engine, etc.