விவசாயிகள் மீது கிரிமினல் நடவடிக்கை இல்லை: காங்., தேர்தல் அறிக்கை

புதுடில்லி: லோக்சபாவுக்கான தேர்தல் அறிக்கையை காங்., இன்று வெளியிட்டது. இதன்படி கடனை செலுத்தாத விவசாயிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், சிவில் வழக்காகவே கருதப்படும் என்றும், வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் இன்றைய தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

55 பக்கங்கள்55 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள்:
* 100 நாள் வேலை திட்டம் 150 ஆக உயர்த்தப்படும்
* 22 லட்சம் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்
* வறுமையை ஒழிப்பதே முக்கிய நோக்கம்
* ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ. 6 ஆயிரம் வங்கி கணக்கில் போடப்படும்
* விவசாயத்திற்கு தனி பட்ஜெட்
* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
* பெண்களுக்கு முழு பாதுகாப்பு
* அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை
* நிதி பற்றாக்குறையை குறைப்போம்
* தென் மாநில வளர்ச்சிக்கு பல திட்டங்கள்

ஆதார் அட்டை, ஜி.எஸ்.டி.,யில் மாற்றம்
*ஆதார் அட்டை முறையில் சீர்திருத்தம்
* ஒட்டுமொத்த ஜி.டி.பி.,யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும்
* தேசவிரோத குற்றம் தொடர்பான விஷயத்தில் மாற்றம்
* காஷ்மீர் சிறப்பு சட்டம் ஆய்வு செய்யப்படும்
* ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் வரும்
* எம்.பி.பி.எஸ்., தேர்வில் மாநில அளவில் தேர்வு
* விவசாய கடனை திருப்ப செலுத்தாவிட்டால் கிரிமினல் குற்றமாக கருதப்படாது
* ரபேல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்
* நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி
* தேச பாதுகாப்பில் சமரசம் இல்லை
* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து
* மாநில பட்டியலில் கல்வி சேர்ப்பு
* நிதி ஆயோக் கலைக்கப்படும்
* மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு
* மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அண்டைய நாடுகளுடன் பேசி தீர்க்கப்படும்.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு ராகுல் பேசுகையில்; தாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் அறிக்கை உத்வேகத்தை அளிக்கும் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)