அன்புமணியிடம் கேள்வி விவசாயி வெளியேற்றம்

மேச்சேரி:'எட்டு வழிச் சாலை திட்டத்தை கொண்டு வந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன்?' என, அன்புமணியிடம் கேள்வி கேட்ட விவசாயி, கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தர்மபுரி தொகுதி, பா.ம.க., வேட்பாளர் அன்புமணி, சேலம் மாவட்டம், மேச்சேரியில் நேற்று, பிரசாரம் மேற்கொண்டார். தொப்பூர் அடுத்த, எருமப்பட்டியில், பிரசாரத்தை துவங்கிய அவர், ஒவ்வொரு இடத்திலும், வேனிலிருந்து இறங்கி நின்றபடி பேசினார்.மேச்சேரி அடுத்த, சிந்தாமணியூர் மாரியம்மன் கோவில் திடலில், மதியம், 2:30 மணிக்கு மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை பேசி முடித்ததும், அன்புமணி பேச துஙங்கி னார். அப்போது, கூட்டத்திலிருந்த, விவசாயி செந்தில் என்பவர், திடீரென எழுந்து, 'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த நீங்கள், அதை கொண்டு வந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன்?' என, கேள்வி எழுப்பினார்.

இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் நின்ற செம்மலை, 'அதை பிறகு பேசி கொள்ளலாம்' எனக்கூறி, செந்தில் முகத்தில் கை வைத்து, பக்கவாட்டில் தள்ளி விட்டார்.அங்கு வந்த போலீசார், பா.ம.க.,வினர் இணைந்து, செந்திலை, கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர். அப்போது, கட்சியினர் தன்னை தாக்கியதால் காயம் ஏற்பட்டதாக கூறி, செந்தில் கூச்சலிட, சிறிது நேரம் சலசலப்பு உண்டானது. பின், அன்புமணி தொடர்ந்து பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)