ம.ஜ.த., - காங்., இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்: ராகுல், தேவகவுடா பங்கேற்பு

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் ராகுல், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா ஆகியோர் தலைமையில், இரு கட்சிகள் இணைந்து நடத்தும் லோக்சபா தேர்தல் பிரமாண்ட பொதுக்கூட்டம், பெங்களூரில் இன்று நடக்கவுள்ளது.


லோக்சபா தேர்தலுக்காக கர்நாடகத்தில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் - 21, ம.ஜ.த., - 7, தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன; பா.ஜ., தனித்து போட்டியிடுகிறது.

பிரசாரம்பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, பா.ஜ., தலைவர் அமித் ஷா உட்பட மத்திய, மாநில அரசியல் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், ராகுல் - தேவகவுடா தலைமையில் கூட்டணி கட்சிகள் இணைந்து, இன்று பெங்களூரில் மிகப்பெரிய பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.இதற்காக, துமகூரு சாலையின் மாதவரா கிராமத்தின் அருகே உள்ள சர்வதேச கண்காட்சி மைதானத்தில், இன்று மாலை, 4:15 மணிக்கு ராகுல் வருகிறார்.முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர், ஜி.பரமேஸ்வர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில, காங்., தலைவர் தினேஷ் குண்டுராவ் உட்பட, இரு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் போட்டியிடும், 10 காங்கிரஸ், 4 ம.ஜ.த., வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர்.மூன்று லட்சம் தொண்டர்களை திரட்ட இரு கட்சிகளின் மேலிடமும் உத்தரவிட்டுள்ளன. முன்னதாக இளைஞர் அணியின் பைக் ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.தொண்டர்களை அழைத்து வருவதற்காக 500 பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், டெம்போ டிராவலர், கார்கள், மினி வேன்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்புமாநாட்டில், ம.ஜ.த., பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், அரசு பொறியாளர்கள் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றி ராகுல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மாநாடு நடக்கும் இடத்தில் நடந்து வரும் ஏற்பாடுகளை, முதல்வர் குமாரசாமி நேற்று மாலை ஆய்வு செய்தார். ராகுல் வருகையை முன்னிட்டு பெங்களூரு - துமகூரு சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் மூலம், மாநாடு நடக்கும் பகுதி, நேற்று ஆய்வு செய்யப்பட்டது.ஒரு பக்கம் இன்று ராகுல் பிரசாரம் செய்தால், ஏப்., 7ம் தேதி பிரதமர் மோடி, சித்ரதுர்கா, மைசூரு தொகுதிகளில் பிரசாரம் செய்யஉள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ.,வினர் செய்து வருகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)