தலித் நலன் விரும்பிக்கு கிடைத்தது ஆக்ரா, 'சீட்'

காங்கிரஸ் சார்பில், உ.பி.,யின் ஆக்ரா லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக, பிரீதா ஹரித் அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியல் அனுபவம் இல்லையென்றாலும், தலித் மக்களுக்காக பணியில் ஈடுபடுவதால், தேர்தலில் வெற்றி பெறுவேன் என, அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் ெவளியிட்ட, ஏழாவது வேட்பாளர்கள் பட்டியலில், பிரீதாவின் பெயர் இடம் பெற்றது. இவர், வருமான வரி துறையில், தலைமை ஆணையராக இருந்து, பதவியை ராஜினாமா செய்தவர். மேலும், 'பகுஜன் சம்யக் சங்கதன்' எனும் அமைப்பை, நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தலித் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நலனுக்காக பாடுபடும் இவருக்கு, தேர்தல் ஆசை வந்தது. அதை அறிந்த, காங்., அவரை வளைத்து உள்ளது. ஆக்ரா லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற, காதல் சின்னம், தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா லோக்சபா தொகுதியில், 10 சதவீதம் முஸ்லிம்கள், 10 சதவீதம் யாதவ வாக்காளர்களும் இருக்கின்றனர். இவர்கள், காலம் காலமாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதியின் ஆதரவாளர்கள். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், காங் கிரஸ் சார்பில், இந்த தொகுதியில், உபேந்திர சிங் போட்டியிட்டார். 3.25 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்ற அவர், தோல்வி அடைந்தார். இந்த தொகுதியின், எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராம்சங்கர் உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)