கண்துடைப்புக்கு நடந்த பணிகள்

ஐந்து ஆண்டுகளில், எத்தனை முறை, தொகுதி மக்களை சந்தித்துள்ளீர்கள்?தொகுதி மக்களை அரசு நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேன். காஞ்சிபுரம் தொகுதியில், நான் போகாத ஊர்களே கிடையாது. அந்த அளவு கிராமங்களுக்கு சென்று, மக்களை சந்தித்துள்ளேன். இவை தவிர, மனு நீதிநாள் முகாம்களிலும் பங்கேற்கிறேன்.

அங்கேயே என்னிடம் பொதுமக்கள் மனுக்கள் கொடுப்பர். என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பேன். முடியாத பணிகளை, கலெக்டரிடம் கூறி, உதவி செய்வேன்.லோக்சபாவில், எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக ஓட்டு அளித்தீர்கள்?

எத்தனை முறை ஓட்டளித்தேன் என்பது நினைவில் இல்லை.உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடம் கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளதா? உண்மை தான். தொகுதி மக்களிடம் கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்த, எம்.பி.,யின் செயல்பாடுகளை காட்டிலும், தற்போது எங்களுக்கு நல்ல பெயர் கூடுதலாகவே உள்ளது. என் வீட்டுக்கு வரும் பொதுமக்களின் பிரச்னைகளை சரி செய்துள்ளேன். ஜெயலலிதா வழியில், அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு செல்கிறோம்.

உங்கள் கட்சி வெற்றி பெறுமா?தேர்தலில் நாங்கள், 100 சதவீதம் வெற்றி பெறுவோம். காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, எப்போதுமே, அ.தி.மு.க.,வின் கோட்டை. இந்த தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறேன்; 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.காஞ்சிபுரம் தொகுதியில், தற்போது, தி.மு.க., போட்டியிடுகிறதே ?கடந்த, 2014ம் ஆண்டே, காஞ்சிபுரம் தொகுதி, தி.மு.க.,விற்கு தான் ஒதுக்கப்பட்டது. தி.மு.க.,வை மக்கள் ஏற்கவில்லை. மக்கள் ஏற்றிருந்தால், 2014ம் ஆண்டிலேயே வெற்றி பெற்றிருப்பர்.

தற்பாதைய தேர்தலிலும், அ.தி.மு.க., தான் வெற்றி பெரும். மக்கள் எங்களை தான் ஏற்பர்.எம்.பி., நிதியில் எத்தனை பணிகள் செய்துள்ளீர்கள்?ஐந்தாண்டுகளில், 372 பணிகள் செய்துள்ளேன். கண்காணிப்பு கேமராக்கள், ஆழ்துளை கிணறு, காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கம் புனரமைப்பு பணிக்காக, 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன். 2015ல் வெள்ளம் ஏற்பட்ட போது, 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன்.

தொகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் என்ன?சிறுசேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. ஏராளமானோர் வந்து செல்லும் இடம் என்பதால், அங்கு ரயில் நிலையம் கட்ட வேண்டி, 2015ல், லோக்சபாவில் பேசினேன். தற்போது, அதற்கான பணி நடந்து வருகிறது.பாலாறு தடுப்பணைக்கு நிதி கேட்டு, லோக்சபாவில் பேசி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டியும் பேசியுள்ளேன்.நீங்கள் தத்தெடுத்த ஒரத்தி கிராமத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்?

தார் சாலை, உயர் கோபுர விளக்கு, பசுமை வீடுகள் வாங்கி கொடுத்துள்ளேன், பள்ளி கழிப்பறைக்கு பரிந்துரை செய்துள்ளேன்.அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு, வங்கி கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். பல அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருக்கிறேன்.

காஞ்சிபுரம் - தனி/ மரகதம் எம்.பி., படம் வைக்கவும்(2009 ல் உருவாக்கப்பட்டது)-------------------------------------------------------------------------------------------------எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்! காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள, பட்டு பூங்கா திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. இடம் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதே தவிர, எந்த பணிகளும் நடக்கவில்லை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில், புதிய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை கூடவில்லை செய்யூர் அனல் மின் நிலையம் திட்டம், ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. அடுத்தகட்ட பணிகள் நடைபெறாமல் கிடப்பிலேயே உள்ளது. திட்டம் வந்தால், சுற்று வட்டாரங்களில், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், சென்னைக்கு கூடுதல் ரயில் தேவை என்ற கோரிக்கை, இதுவரை நிறைவேறவில்லை. மாமல்லபுரம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை இவர் தத்தெடுத்த, ஒரத்தி ஊராட்சியில், அடிப்படை வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகளில், எம்.பி., நிதியில், கண்துடைப்புக்காக சில பணிகள் மட்டுமே செய்யப்பட்டன. ஒரத்தி கிராமம் மேம்பாடு அடையவில்லை.----------------------------------------------------------------------------------------

தொகுதிக்குட்பட்டசட்டசபை தொகுதிகள்1. காஞ்சிபுரம்2. செங்கல்பட்டு3. உத்திரமேரூர்4. மதுராந்தகம் - தனி5. திருப்போரூர்6. செய்யூர் - தனி-------------------------------------------இந்த முறை வாக்காளர்கள் விபரம்கடந்த தேர்தல்கள்2014மரகதம் - அ.தி.மு.க., - 4,99,395 - 33.7செல்வம் - தி.மு.க., - 3, 52,529 -- 23.8மல்லை சத்யா - ம.தி.மு.க., - 2,07,080 -- 13.9விஸ்வநாதன் - காங்கிரஸ் - 33,313 -- 2.25--------------------------------------------2009விஸ்வநாதன் - காங்கிரஸ் - 3,30,237 - 42.0ராமகிருஷ்ணன் - அ.தி.மு.க., - 3,17,134 - 40.3தமிழ்வேந்தன் - தே.மு.தி.க., - 1,03,560 - 13.1----------------------------------------(2009 தேர்தலில் தான் இத்தொகுதி உருவாக்கப்பட்டது)*****வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)