தம்பிதுரையின் கரூர் தொகுதி: என்ன சொல்கிறார் எம்.பி.,

ஐந்து ஆண்டுகளில், தொகுதி மக்களை சந்தித்தது எத்தனை முறை?லோக்சபா கூட்டத்தொடர் இல்லாத சமயங்களில், தொகுதி மக்களை சந்தித்து உள்ளேன். ஆறு மாதங்களில், ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றுள்ளேன். குறிப்பாக, 20 ஆயிரம் கிராமங்களில், மக்களை சந்தித்துள்ளேன்.

தொகுதிக்கு நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள்?கரூர் - தோகைமலை வழியாக, திருச்சி சாலை மற்றும் கரூர் - கோவை எட்டு வழிச்சாலை ஆய்வில் உள்ளது. வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் மூடப்படுவதை தடுத்து உள்ளேன். திண்டுக்கல் பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் நிறுத்தம் பெற்று கொடுத்துள்ளேன். சேலம் - எழும்பூர் ரயில், கரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. க.பரமத்தி, தென்னிலையில் டோல்கேட்கள் மூடப்பட்டுள்ளன. கரூரில் மருத்துவ கல்லுாரி கொண்டு வரப்பட்டுள்ளது.


மண்மங்கலம், கோடங்கிபட்டி, வீரராக்கியம் உள்ளிட்ட, ஐந்து இடங்களில், குகை வழி பாதைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக நலனுக்காக, லோக்சபாவில் பல பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துள்ளேன்.

எத்தனை மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டுஅளித்தீர்கள்?கடந்த, ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ., ஆட்சியில் முத்தலாக் தடை சட்டம், ஜி.எஸ்.டி., நடைமுறை மற்றும் முற்பட்ட பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாக்கள் தான் முக்கியம். இந்த மூன்றையும் எதிர்த்து, வெளிநடப்பு செய்துள்ளோம். வழக்கமாக வரும் பல மசோதாக்களை வரவேற்றுள்ளோம்.

உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடம், கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டுள்ளதா?உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், ஒரு கவுன்சிலர் போல, தொகுதியை சுற்றி வருகிறேன். குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும், அதிகாரிகள் துணையுடன் தீர்த்துள்ளேன். இதனால், தொகுதி மக்கள் என்னையும், அ.தி.மு.க.,வையும் மறக்க மாட்டார்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை, முழுமையாக பயன்படுத்தி உள்ளேன்.

உங்கள் கட்சி வெற்றி பெறுமா ?முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர்,எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், பல புதிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மேலும், லோக்சபா தேர்தலுக்காக, பலமான கூட்டணியை அமைத்துள்ளனர். அ.தி.மு.க., நிச்சயம் வெற்றி பெறும்.

எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்1, கரூர் புறநகரில் பஸ் ஸ்டாண்ட் திட்டம் நிறைவேற்றப்படவில்லை


2, கரூர் - சென்னை பகல் நேர ரயில் திட்டம் இல்லை


3, அரவக்குறிச்சியில், முருங்கை பவுடர் தொழிற்சாலை கொண்டு வரவில்லை


4, கிருஷ்ணராயபுரத்தில், அரசு கலைக் கல்லுாரி திட்டம் கிடப்பில் உள்ளது


5, கரூரில், சாயப்பட்டறை பூங்கா திட்டம் நிறைவேற்றப்படவில்லை


6, டி.என்.பி.எல்., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் இல்லை.


கடந்த தேர்தல்கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை, தி.மு.க., - சின்னசாமி, பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., - கிருஷ்ணன், காங்., - ஜோதிமணி போட்டியிட்டனர். இவர்களில், தம்பிதுரை வெற்றி பெற்றார்.


2014ல் மொத்த வாக்காளர்கள்: 12,98,322பதிவான ஓட்டுகள்: 10,46,534 80.6 சதவீதம்முதல் மூன்று இடங்கள்1. அ.தி.மு.க., - தம்பிதுரை: 5,40,7222. தி.மு.க., - சின்னசாமி: 3,45,4753. தே.மு.தி.க., - கிருஷ்ணன்: 76,580.


கடந்த ஐந்து ஆண்டுகளில், தொகுதி மேம்பாட்டு நிதியாக, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள, மூன்று சட்டசபை தொகுதிகளில் மட்டும், 11.20 கோடி ரூபாய் மதிப்பில், 286 பணிகள் நடந்துள்ளன.


இம்முறைமொத்தவாக்காளர்கள்: 13,43,704ஆண்கள்: 6,58,905பெண்கள்: 6,84,741திருநங்கையர்: 58கரூர் லோக்சபா தொகுதி, கரூர், திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை என, 4 மாவட்டங்களில் பரவி கிடக்கிறது. அதன் விபரம்:1. கரூர்2. அரவக்குறிச்சி3. கிருஷ்ணராயபுரம் - தனி
4. விராலிமலை -- புதுக்கோட்டை5. வேடசந்துார் - திண்டுக்கல்6. மணப்பாறை - திருச்சிவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)