ஏழு தான்! தோல்வியை ஒப்புக் கொண்டார் தேவகவுடா; பெங்களூரு வடக்கு தொகுதியில், காங்., போட்டி

பெங்களூரு: பெங்களூரு வடக்கு தொகுதியை, காங்கிரசிடமே, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா திருப்பிக் கொடுத்து விட்டார். பா.ஜ., வேட்பாளர் சதானந்த கவுடா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மீதான பயத்தால், ம.ஜ.த., பின்வாங்கியது. இதனால், ஏழு தொகுதிகளில் மட்டும், ம.ஜ.த., போட்டியிடுகிறது.

லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளன. தொகுதி பங்கீட்டின் போது, பெங்களூரு வடக்கு, தங்களுக்கு கொடுத்தே ஆக வேண்டு மென, ம.ஜ.த., தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் வலியுறுத்தினார். இத்தொகுதியில் தானே களமிறங்க, தேவகவுடா திட்டமிட்டார்.பேச்சின் முடிவில், உடுப்பி - சிக்கமகளூரு, உத்தர கன்னடா, துமகூரு, மாண்டியா, ஹாசன், விஜயபுரா, பெங்களூரு வடக்கு, ஷிவமொகா ஆகிய எட்டு தொகுதிகள் ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டன.

களமிறக்க முயற்சி:
உடுப்பி - சிக்கமகளூரு, உத்தர கன்னடா, விஜயபுரா, பெங்களூரு வடக்கு ஆகிய நான்கு தொகுதிகளுக்கு, ம.ஜ.த.,வில் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் இல்லை.இதனால், உடுப்பி - சிக்கமகளூரு, உத்தர கன்னடா, விஜயபுரா ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் பிரமுகர்களையே, ம.ஜ.த., சின்னத்தில் களமிறக்க வைக்கும் முயற்சிகள்நடக்கின்றன.'எங்கள் தொகுதி பிரச்னைகளை தீர்க்கும் வரை, ம.ஜ.த., வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பைரதி பசவராஜ், பைரதி சுரேஷ், எஸ்.டி.சோமசேகர் ஆகியோர், முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இதை பொருட்படுத்தாமலும், களத்தில் குதிப்பதற்கு தேவகவுடா தயாராக இருந்தார். முன்பகை காரணமாக, சித்தராமையா ஆதரவாளர்கள் இறுதியில் காலை வாரிவிடுவர் என, தேவகவுடாவுக்கு பலரும் அறிவுரை கூறினர்.முதல்வர் குமாரசாமியும் உளவுத்துறை மூலம் ரகசிய சர்வே செய்தபோது, பா.ஜ.,வுக்கு தான் அதிக பலம் இருப்பது தெரிய வந்தது.

செல்வாக்கு இல்லை!
இந்த நிலையில், துமகூருவில் தேவகவுடா போட்டியிட முடிவு செய்ததால், பெங்களூரு வடக்கில், ம.ஜ.த., சார்பில் களமிறக்க செல்வாக்குமிக்க தலைவர்கள் யாருமில்லாத நிலை ஏற்பட்டது.ம.ஜ.த., சின்னத்தில் போட்டியிட, காங்கிரஸ் தலைவர்களும் சம்மதிக்காததால், யாரும் எதிர்பாராதவிதமாக, இந்த தொகுதியை, காங்கிரசுக்கே, ம.ஜ.த., விட்டுக் கொடுத்துள்ளது. எனினும், காங்கிரஸ் வேட்பாளரை, ம.ஜ.த.,வினர் ஆதரிப்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதற்கிடையில் துமகூரில் ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கிருஷ்ணபைரே கவுடா போட்டி:
பெங்களூரு வடக்கில், ம.ஜ.த., வில் தன் முன்னாள் சிஷ்யர், பி.எல்.சங்கரை நிறுத்த, தேவகவுடா திட்ட மிட்டிருந்தார். ஆனால் அவரோ, “ம.ஜ.த., சின்னத்தில் வேண்டாம். காங்கிரஸ் வேட்பாளராக வேண்டுமானால் போட்டியிடுகிறேன்,” என, கூறிவிட்டார்.'நீங்களே போட்டியிடுங்கள்' என, ம.ஜ.த., தலைவர்கள், தேவகவுடாவை வலியுறுத்தினர். அதற்கும் தேவகவுடா ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் கூறியதாவது:ஏற்கனவே எங்கள் மீது குடும்ப அரசியல் என்ற அதிருப்தி பொதுமக்களிடம் உள்ளது. இரண்டு தொகுதி களில் போட்டியிட்டால் தவறான தகவலை பரப்பிவிடும். துமகூரிலும் பின்னடைவை ஏற்படுத்தும்.பெங்களூரு வடக்கு தொகுதியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவருமே, முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சிஷ்யர்கள். ம.ஜ.த., வெற்றிக்கு அவர்கள் ஒத்துழைப்பரா என்று கூற முடியாது.குறைந்த கால அவகாசம் இருப்பதால், இரண்டு தொகுதியிலும் பிரசாரம் செய்ய முடியாது. இவ்வாறு கூறி, தொகுதியை விட்டுக் கொடுக்க அவர் முடிவு செய்தார்.

'துமகூரிலிருந்து பின்வாங்கினால், முத்தஹனுமே கவுடாவுக்கு பயந்து தொகுதியை மாற்றிக் கொண்டார் என்ற அவப்பெயர் ஏற்படும்' என, காங்கிரசாரிடம் தேவகவுடா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், பெங்களூரு வடக்கு தொகுதி காங்., வேட்பாளராக, கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையும், கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கிருஷ்ணபைரே கவுடா போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)