ம.ஜ.த., சின்னமாக மாறிய மோனிகா

கர்நாடகா முதல்வர், குமாரசாமியின் மகன், நிகில் கவுடாவுக்கு ஆதரவு தெரிவித்து, 11 வயது சிறுமி மோனிகா, பச்சை சேலை உடுத்தி வந்து, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், மாண்டியா தொகுதியில், கர்நாடகா முதல்வர், குமாரசாமியின் மகன், நிகில் கவுடா, அவர் தாத்தா ஆரம்பித்த, மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில், போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது, அவரை ஆதரித்து, 11 வயது சிறுமி மோனிகா, பச்சை சேலை உடுத்தி, தலையில் புல் கட்டுடன் வந்து ஆதரவு அளித்தார். ஹோஸ்கோட்டை சேர்ந்த, மோனிகாவுடன், தாய் சந்தியாயினியும் வந்திருந்தார். மோனிகாவுக்கு, நீண்ட நாட்களாக சிறுநீரக பிரச்னை இருந்தது.

இதற்கு, ஆட்டோ டிரைவரான, மோனிகாவின் தந்தை சம்பங்கி, 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தார். ஆனாலும் பிரச்னை தொடர்ந்தது. தந்தையிடம் பணமில்லை. இதனால், அந்த சிறுமி அவதி அடைந்தார். இதை அறிந்த குமாரசாமி, 2016ல், 30 லட்சம் ரூபாய் அளித்து, சிகிச்சைக்கு உதவி செய்தார்; மோனிகாவின் உடல்நிலை சீரடைந்தது. இதற்கு நன்றி கடனாக, மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி சின்னமான, தலையில் புல் கட்டுடன் விவசாய பெண் போல வேடமணிந்து, குமாரசாமி அண்டு கோவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து வருகிறார், இந்த சிறுமி.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)