மோடிக்கு ஓட்டு; வாயை உடை: மஜத எம்எல்ஏ பேச்சு

பெங்களூரு : பிரதமர் மோடி பெயரை சொல்லி ஓட்டு கேட்பவர்களை மக்கள் அடித்து, வாயை உடைக்க வேண்டும் என மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,வான கே.எம்.சிவலிங்கே கவுடா பேசி உள்ளது சர்ச்சையாகி உள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவாளர்களிடம் பேசிய சிவலிங்கே, சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மோடி தோற்று விட்டார். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவும் அவர் தவறி விட்டார். நாடு முழுவதிலும் இருந்து உங்களிடம் ஓட்டுக்கேட்டு வருவார்கள்.
யாராவது மோடி, மோடி என முழக்கமிட்டபடி ஓட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு ஓங்கி அறை கொடுத்து, அவர்களின் வாயை உடையுங்கள். மோடி ஓட்டு கேட்டு வந்தால் அவர் மீது கல் எறியுங்கள் என பேசி உள்ளார்.
சிவலிங்கேவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பா.ஜ., செய்தி தொடர்பாளரும் எம்எல்ஏ.,வுமான சுரேஷ்குமார் கூறுகையில், சிவலிங்கே கவுடா வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். மோடி மீது கல் எறியும்படி ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதே போன்ற பல தலைவர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். பிரதமரை பார்த்து இவர்கள் பயப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)