நூற்றுக்கு நூறு இலக்கு : ஸ்டாலின்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். வாக்குசேகரிப்பின் போது அவர் கூறியதாவது: திருவாரூர் போல திருவண்ணாமலையும் திமுகவின் கோட்டைதான். 40 மக்களவை தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி கண்முன்னே தெரிகிறது. 18 தொகுதிகள் கொண்ட சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று நூற்றுக்கு நூறு என்ற இலக்கை அடைய வேண்டும். வன்முறையின் அடையாளமே பா.ம.க தான் என்று சட்டபேரவையில் ஜெயலலிதாவே கூறியிருந்தார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)