மார்ச் 25ல் பிரசாரத்தை துவக்குகிறார் பிரேமலதா

சென்னை, தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா, வரும், 25ம் தேதி, பிரசாரத்தை துவங்குகிறார்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று, தற்போது, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். முன்பை போல தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்பதால், ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் பிரசாரம் செய்ய, அவர் திட்டமிட்டுள்ளார்.விஜயகாந்திற்கு பதிலாக, அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான, பிரேமலதா, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்காக, பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக, தமிழகம் முழுவதும், அவர் சுற்றுப் பயணம் செய்யும் வகையில், பிரசார திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும், 25ம் தேதி, கன்னியாகுமரியில் தன் பிரசாரத்தை, பிரேமலதா துவங்குகிறார். அன்று, பா.ஜ., வேட்பாளர், பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, பிரசாரம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., கூட்டணி கட்சியினரை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்.தே.மு.தி.க., போட்டியிடும் நான்கு தொகுதிகளில் மட்டும், இரண்டு நாட்கள் முகாமிட்டு, சட்டசபை தொகுதி வாரியாக, அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இறுதிக்கட்டமாக, தன் சகோதரர் போட்டியிடும், கள்ளக்குறிச்சி தொகுதியில், பிரசாரத்தை முடிக்க பிரேமலதா திட்டமிட்டுள்ளார். அதே நேரம், பிரசாரத்தை, வடசென்னையில் முடிக்க வேண்டும் என, கட்சியினர்கோரியுள்ளனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)