சங்கு ஊதிடுவாங்களோ...மிரட்சியில் ஒடிசா முதல்வர்

சிறப்பு செய்தியாளர்எதிர்க்கட்சிகளின் எந்த வியூகத்தையும் உடைத்தெறியும் அபார திறமை பெற்றுள்ள, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் தலைவருமான, நவீன் பட்நாயக், சொந்தக் கட்சியினரால், நொந்து நுாடுல்சாகிஉள்ளார்.ஒடிசாவில் உள்ள, 21 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 11, 18, 23, 29 என, நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இத்துடன், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.ஐந்தாவது முறையாக முதல்வராகும் கனவில் உள்ள, நவீன் பட்நாயக், இந்த மாநிலத்தில், தன் கட்சி வளர்கிறதோ இல்லையோ, எதிர்க்கட்சிகள் வளராமல் பார்த்து கொள்கிறார்.வரும் லோக்சபா தேர்தலில், கட்சி வேட்பாளர்களில், 33 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். அப்போதே, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. மொத்தமுள்ள, 21 தொகுதிகளில், ஏழு தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், தங்களின் வாய்ப்பு பறிபோகும் என, கட்சியின் மூத்த ஆண் தலைவர்கள் பயந்தனர்.இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவர்களான, பாண்டா, சத்பதி, பாலபத்ர மாஜ்ஹி, திரிநாத் கோமங்கோ வரிசையாக வெளியேறினர். இவர்களில் பெரும்பாலானோர், பா.ஜ.,வில் இணைந்துள்ளனர்.தேர்தல் நேரத்தில், மூத்த தலைவர்கள் வெளியேறுவது, அரசியல் கட்சிகளுக்கு சாதாரணம் தான். ஆனால், பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய தலைவர்கள், 'நவீன் பட்நாயக் சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்' என்று குற்றஞ்சாட்டி சென்று உள்ளனர்.இது, நவீன்பட்நாயக்குக்கு பெரும் திருகுவலியாக அமைந்துள்ளது. இந்த தலைவர்களின் இந்த புகார், மக்களிடையே தன் மீதான நல்ல அபிப்பிராயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, அவர் கருதுகிறார்.பெண்களுக்கு, 33 சதவீத இடங்கள் என்ற அவரின் அறிவிப்பு, சட்டசபை தேர்தலுக்கும் பொருந்துமா என்ற குழப்பத்தில், கட்சியினர் உள்ளனர்.
சட்டசபை தேர்தலிலும், இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், மேலும் பலர், கட்சியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது.அதனால், வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை ஆகியவற்றை, நவீன் பட்நாயக் தாமதப்படுத்தியுள்ளார்.எதிர்க்கட்சிகளை சமாளிப்பதைவிட, சொந்தக் கட்சியினரை சமாளிப்பதிலேயே அவர் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.போகிறப் போக்கைப் பார்த்தால், மாநிலத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்புக்கு, கட்சியின் சின்னமான, சங்கை ஊதிடுவாங்களோ என்ற கலக்கத்தில் உள்ளார், நவீன் பட்நாயக்.

தொடரும் தாவல்களால்தொகுதி மாறும் முதல்வர்
கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள், முன்னாள் - இந்நாள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் விலகி, பா.ஜ.,வில் இணைந்து வருவதால், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான, நவீன் பட்நாயக் விரக்தியில் உள்ளார். இந்த பிரச்னையை சமாளிக்க, தொகுதியை மாற்ற முடிவு செய்தார்.இது குறித்து, முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஹிஞ்சிலி மற்றும் பீஜப்பூர் தொகுதிகளில், முதல்வர் நவீன் போட்டியிடுவது என முடிவானது. கட்சியில் இருந்து விலகியவர்களில் பெரும்பாலானோர், மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பகுதியில் போட்டியிட, நவீன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.- சாந்தனு பானர்ஜி -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)