மே 2 காலை 8:30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவக்கம்

சென்னை: ''தமிழகத்தில், மே, 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியிலும், ஓட்டு எண்ணிக்கை, மே, 2ம் தேதி காலை, 8:30 மணிக்கு துவங்கும். தபால் ஓட்டு எண்ணிக்கையும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணியும், ஒரே நேரத்தில் துவங்கும்.

ஓட்டுச்சீட்டுஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், குறைந்தது, 14 மேஜைகளில் இருந்து, 30 மேஜைகள் வரை, ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள இட வசதிக்கேற்ப, எத்தனை மேஜைகளில், ஓட்டுகளை எண்ணுவது என்பதை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முடிவு செய்வர்.ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஏதேனும் ஐந்து ஓட்டுச்சாவடிகளில், வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் அச்சிடப்பட்ட, ஓட்டு சீட்டுகள் எண்ணிப் பார்க்கப்படும்.


தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், இந்தப் பணி நடக்கும்.கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், அந்த தொகுதிக்கு உட்பட்ட, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தலா, ஐந்து ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச் சீட்டுகள் எண்ணிப் பார்க்கப்படும்.ஓட்டு எண்ணிக்கையின் போது, ஏதேனும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், பதிவான ஓட்டுகளை எண்ண முடியாவிட்டால், அந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் தனியாக வைக்கப்படும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் இடையே, ஓட்டு வித்தியாசம், மிகக் குறைவாக இருந்தால், அந்த ஓட்டுச்சாவடியின் வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் பதிவான ஓட்டுச் சீட்டுகள் எண்ணப்படும். ஓட்டு வித்தியாசம் அதிகம் இருந்தால் எண்ணப்படாது.ஓட்டு எண்ணும் இடத்தில், சமூக இடைவெளி பின்பற்றப்படும். ஓட்டு எண்ணும் மேஜையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். எனவே, உடனுக்குடன் முடிவுகள், ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியில் வைக்கப்படும் திரையில், நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆன்லைன்மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம், அறிக்கை பெறப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எந்த கதிர்வீச்சு அலைகளை பயன்படுத்தியும், எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, இம்முறை அதிகரிக்கப்பட்டு உள்ளதால், வேட்பாளர்களின் எண்ணிக்கை, ஓட்டு எண்ணப்படும் மேஜைகள் எண்ணிக்கைக்கேற்ப, தொகுதிகளின் இறுதி முடிவுகள் வெளியாகும் நேரம் மாறுபடும்.ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, முதன் முதலாக, நேற்று, 'ஆன்லைன்' வழியே, பயிற்சி அளிக்கப்பட்டது; ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

.பாதுகாப்பு உபகரணங்கள்ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, முக கவசம், கிருமி நாசினி, முகத்தை மறைக்கும், 'ஷீல்டு' மற்றும் கையுறை போன்றவை, தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும். ஓட்டு எண்ணும் அறை முழுதும், கிருமி நாசினி தெளிக்கப்படும்.


ocean - Kadappa,இந்தியா
21-ஏப்-2021 07:32 Report Abuse
ocean கையில் இருப்பதை சரிபண்ணி தேர்தலை முடிப்போம். யார் ஜெயித்தாலென்ன. யார் தோற்றாலென்ன.எங்களுக்கு கவலை இல்லை. தேர்தல் ஆணையம் யார் நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும்.
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-2021 22:45 Report Abuse
Pugazh V "கதறுங்கடா" என்று அவமரியாதையாகக் கதறுவதென்னவோ பாஜக வாசகர்கள் தான். பாவம். பாஜக எதாவது இயந்திரம் மாற்றும் தகிடுதத்தம் பண்ண முயன்று கொண்டே இருக்கிறது. புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம் வரை அலர்ட்டாக.இருக்கிறார்கள். இனி எலக்ட்ரானிக் தகிடுதத்தம் பண்ணப் பார்க்கும்.
Chandramouli - Mumbai,இந்தியா
20-ஏப்-2021 15:10 Report Abuse
Chandramouli தோல்விக்கான காரணம் இப்போதே கிடைத்து விட்டது . தேர்தல் அன்று என்ன நாடகம் நடக்க போகிறதோ என்று தெரியவில்லை .. முக்கிய நபர்கள் தோல்வி உறுதி . அன்று மக்கள் ஜாக்கிரதையாக வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது .
Visu Iyer - chennai,இந்தியா
20-ஏப்-2021 13:19 Report Abuse
Visu Iyer கொரானா... கொரானா.... நீ வெற்றி பெறும் தொகுதி எது...? என்று கற்பனையாக கேட்டு பார்த்தேன்... அடுத்த முதல்வர் இவர் தான் என்று கொரனாவே சொல்லிவிட்டது.. விழித்து பார்த்தேன்.. அட.. இது கனவு...
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-2021 05:45 Report Abuse
Mani . V அதுதான் செட்டிங் எல்லாம் நல்லபடியா முடிந்து இருக்குமே. அப்புறம் எதுக்கு மே 2 வரை காத்திருக்கணும்?
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
20-ஏப்-2021 14:23Report Abuse
ShivRam ShivShyamகதறுங்கடா ...உபி களின் கதறல் சங்கிகளுக்கு ஒரு இனிய நாதம்...
Visu Iyer - chennai,இந்தியா
20-ஏப்-2021 15:38Report Abuse
Visu Iyerஇன்னும் ஒரு பகுதி பாக்கி இருக்கு....
blocked user - blocked,மயோட்
20-ஏப்-2021 04:22 Report Abuse
blocked user வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்தபின் ஓட்டை எண்ணினால் என்ன இல்லை எண்ணாவிட்டால் என்ன... எல்லாம் ஒன்றுதான்.
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
20-ஏப்-2021 14:24Report Abuse
ShivRam ShivShyamமேலும் ஒரு கதறல் ...பண்ணின பாவம் ..எத்தனை குடும்பத்தை கதற விட்டுருப்பீங்க ..இன்னிக்கு நீங்க கதறுங்க...
Visu Iyer - chennai,இந்தியா
20-ஏப்-2021 15:41Report Abuse
Visu Iyerபணம் தருகிறார்கள் என்று தெரிந்தே தேர்தல் நடத்தினால் என்ன நடத்தாவிட்டால் என்ன... தருவதற்கு எடுத்துச் சென்ற பணம் இந்த கட்சியினது தான் என்று தெரிந்தும் அந்த கட்சியை தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தல் நடத்தினால் என்ன நடத்தாவிட்டால் என்ன.. இது எல்லாம் தெரிந்தும் ஒட்டு போட்டால் என்ன.. போடாவிட்டால் தான் என்ன... இப்படி கேள்வி கேட்டால்.. ............?...
Visu Iyer - chennai,இந்தியா
20-ஏப்-2021 15:42Report Abuse
Visu Iyerஅடிக்கிறமாதிரி அடித்தால் அழுவது போல அழ வேண்டும்.. காக்கா நிறம் வெள்ளை என்றால் ஆமாம் என சொல்ல வேண்டும் இல்லை என்றால் கண் தெரியாது என்பார்கள்.....
N.K - Hamburg,ஜெர்மனி
20-ஏப்-2021 20:57Report Abuse
N.K ஹேக் செய்வார்கள் என்று தெரிந்தபின் ஓட்டு போட்டால் என்ன போடாவிட்டால் என்ன. திமுக ஆட்கள் எல்லாம் வீட்டிலேயே உட்கார்ந்துகொள்ளவேண்டியதுதானே...
Vaidyanathan - Chennai,இந்தியா
20-ஏப்-2021 21:37Report Abuse
Vaidyanathanseeing ghosts in shadows. such arbitrary comments and unfounded doubts are unhealthy....
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)