சீமான் சின்னம் இன்று தெரியும்
தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சில தேர்தல்களாக கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை, பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.
இந்த கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. சின்னம் மறுக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் கமிஷனில் சீமான் முறையிட்டார். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
இதை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு மீது தேர்தல் கமிஷன் மற்றும் பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இலவச சின்னம் வழங்கும் தேர்தல் கமிஷனின் ஆணையை ஆய்வு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தார்.
வாசகர் கருத்து