அமைந்தது இளைஞர் பார்லிமென்ட்

புதுடில்லி : இளைஞர்களை அதிகம் கொண்டதாக 17 வது லோக்சபா அமைந்துள்ளது. அதாவது தற்போது அமைந்துள்ள லோக்சபாவில் 64 எம்.பி.,க்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 8.2 கோடி பேர் முதல் முறையாக ஓட்டளித்தவர்கள். அதிக அளவிலான இளைஞர்கள் ஓட்டளித்த தேர்தல் இதுவாகும். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.,க்களில் 221 பேர் 41 முதல் 55 வயது வரையிலானவர்கள். தற்போதுள்ள லோக்சபா எம்.பி.,க்களில் மிகவும் வயது குறைந்தவர் ஒடிசாவின் கியோன்ஜர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ., வேட்பாளர் சந்தராணி முர்மு . 25 வயதாகும் இவர் 2017 ல் பி.டெக்., பட்டம் முடித்தவர்.தற்போதுள்ள லோக்சபாவில் 64 பேர் 25 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள், 221 பேர் 41 முதல் 55 வயதிற்கு உட்பட்டவர்கள், 227 பேர் 56 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள், 30 பேர் 70 வயதிற்கும் அதிகமான வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் அதிக இளைஞர்களை எம்.பி.,யாக கொண்ட கட்சியாக பா.ஜ., வும், அதுன் கூட்டணி கட்சிகளும் உள்ளன.
கல்வி தகுதியைபொறுத்தவரை 30 சதவீதம் பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள். 17 சதவீதம் பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள். 2 சதவீதம் பேர் டாக்டர்கள். பட்டதாரி எம்.பி.,க்களை அதிகம் கொண்ட கட்சியாகவும் பா.ஜ.,வே உள்ளது.


J.Isaac - bangalore,இந்தியா
03-ஜூன்-2019 15:53 Report Abuse
J.Isaac நல்லது .
J.Isaac - bangalore,இந்தியா
03-ஜூன்-2019 15:52 Report Abuse
J.Isaac 43 % உறுப்பினர்கள் குற்ற பின்னணி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஜூன்-2019 20:33 Report Abuse
Tamilan இவர்களை வைத்து நாடு முழுவதும் பலதரப்பட்ட குண்டர்களைத்தான் உருவாக்கமுடியுமே தவிர , தங்களுக்கு அடியாட்களாக வேலை செய்ய மோடி போன்ற ஒருசிலர் இவர்களை பயன்படுத்தி கொள்வார்களே தவிர உருப்படியாக எதுவும் நடக்க போவதில்லை .
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
02-ஜூன்-2019 20:09 Report Abuse
 Muruga Vel வயது ஒரு தடையே இல்ல .. தமிழ்நாட்டில் ஐம்பது வயதில் மாணவரணி தலைவராகவும் ..எழுபதில் இளைஞரணி தலைவராகவும் செயல் படலாம்
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
03-ஜூன்-2019 09:47Report Abuse
Chowkidar NandaIndiaஅது தமிழ்நாட்டிற்கே உரித்தான ஒரு கலாச்சாரம்....
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
02-ஜூன்-2019 17:58 Report Abuse
தமிழ் மைந்தன் எழுதப் படிக்க தெரியாத ஆனால் ஊழல் மட்டுமே செய்ய தெரிந்த ஊழல்திமுக ஆட்கள் 38 பேர் மட்டுமா
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)