‛தலை'க்கு அழைப்பில்லை: விழாவை புறக்கணித்த திமுக

புதுடில்லி : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படாததால் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் திமுக எம்.பி.,க்கள் புறக்கணித்துள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தாவிற்கு அழைப்பு அனுப்பியும், அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஆனால் ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. திமுக எம்பிக்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தலைவருக்கு அழைப்பு இல்லாததால் அக்கட்சி எம்.பி.,க்கள் விழாவை புறக்கணித்துள்ளனர். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு அனுப்பப்படாததால் ஸ்டாலினும், ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ., கூட்டணியில் தலா ஒரே ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதே சமயம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக 38 லோக்சபா தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது.
திமுக.,விற்கு அழைப்பு அனுப்பப்படாதது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் அவர்களிடம் அழைப்பை எதிர்பார்க்கவில்லை. பதவியேற்பு விழாவிற்கு அனைத்து எம்.பி.,க்களையும் அழைக்க வேண்டும் என்பது முறை. ஆனால் எங்களுக்கு தமிழ்நாடு இல்லத்திற்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. தனியாக யாருக்கும் அழைப்பு அளிக்கப்படவில்லை என்றார்.அதே சமயம் தமிழகத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு அவர் கலந்து கொண்டனர். திரிணாமுல், திமுக.,வை போன்று தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.


G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
06-ஜூன்-2019 00:51 Report Abuse
G.S.KRISHNAMURTHI kollaikarargalukkum vuzhalkarargalukkum thalaivanukku edhukku azhaippu
RajanRajan - kerala,இந்தியா
04-ஜூன்-2019 10:41 Report Abuse
RajanRajan அததுக்குன்னு ஒரு தராதரம் கூறுகள் இருக்கே. உன்கிட்ட அது எதுவும் இல்லை. அதனாலே நீ அந்த வேலைக்கு எல்லாம் சரிபட்டு வர மாட்டே. ஓடி போய்டு.
விவசாயி - Tiruppur,இந்தியா
03-ஜூன்-2019 16:21 Report Abuse
விவசாயி செந்தில் சிகாமனி அவர்களே கோமாளியை பார்க்க கூட்டம் கூடத்தான் செய்யும்....
விவசாயி - Tiruppur,இந்தியா
03-ஜூன்-2019 16:18 Report Abuse
விவசாயி எங்கள் ஊரில் உள்ள பழைய ஜாமன்கள் பொருக்கும் சங்க தலைவரைகூட அழைக்கவில்லையே......
anand - Chennai,இந்தியா
03-ஜூன்-2019 13:54 Report Abuse
anand காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுமடி.. செல்லாக்காசு
R S GOPHALA - Chennai,இந்தியா
03-ஜூன்-2019 13:32 Report Abuse
R S GOPHALA உன்ன எதுக்கு கூப்புடனும் ? அவுங்க செஞ்சதுதான் சரி. நீங்க போன இடம் உருப்புடாது. அங்க போய் அவங்க கால்ல விழுந்து பதவி ஏதாவது கிடைக்குமான்னு ஒரு நப்பாசைல இருந்தியா? நீங்க அங்க போனா, அவுங்களையும் கெடுத்துடுவீங்க. தயவு செய்து போகாதீங்க. இங்கயே உக்காந்துகிட்டு மொழி போர், கழிப் போர்ன்னு ஏதாவது செஞ்சிகிட்டு, சுழி மார்க் வாங்கறது எப்புடின்னு யோசிங்க. நல்லவங்களா தயவு செஞ்சி கெடுக்காதிங்க.
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-2019 14:06 Report Abuse
J.V. Iyer மோடிஜியை கீழ்த்தரமாக விமரிசனம் செய்த மானம் கெட்டவர்களை அழைக்காமல் இருந்தால்தான் நல்லது.
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
02-ஜூன்-2019 07:40 Report Abuse
Mani iyer Vijayakumar இந்த ஊழல் அரசியல்வாதிகள் கலந்து கொள்ள தேவையில்லை என்பதாகும்
Ramakrishnan Nagarajan - Bangalore,இந்தியா
01-ஜூன்-2019 17:44 Report Abuse
Ramakrishnan Nagarajan PM attended MK's funeral. Parliament mourned the demise of MK who had never been a member, house was adjourned, flag half-mast. In return, Stalin abused PM, called him a thief Now whining about not being invited to oath taking DMK mouthpiece Murasoli foundation was observed in a grand manner, every tom dick and harry was invited, but not BJP. When reporters asked, DMK said BJP is communal, hence not invited.
Ramamoorthy P - Chennai,இந்தியா
01-ஜூன்-2019 17:32 Report Abuse
Ramamoorthy P நீங்க போனா என்ன போகலைன்னா என்ன உங்களை கேட்டுகொண்டா பொழுது விடிகிறது?
மேலும் 65 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)