பெண்கள் இலவச பயணம்? கழகங்கள் அதோ கதிதான்!

ஓய்வு பெற்ற டிரைவர், கண்டக்டர், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை. மாதா மாதம் சம்பளம் போடவே, கடன் வாங்குகின்றன போக்குவரத்து கழகங்கள். இந்த நிலையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என, ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

'டவுன் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு, 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதில் எந்த திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், போக்குவரத்து கழகங்கள், 'கடலில் மூழ்கும் கப்பல்' தான் என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள்.தனியாரிடம் இருந்த போது பஸ்கள் லாபத்தில் இயங்கின. அரசுடைமை ஆக்கப்பட்ட பின்,நிர்வாக திறமையின்மை, அரசியல் ஆட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் கழகங்கள் தத்தளிக்கின்றன. இந்த நிலையில், கட்சிகளின் அறிவிப்பால்,போக்குவரத்து கழகங்களின் கதி கேள்விக்குறியாக நிற்கிறது.

தனியார் துறையில் இயக்கப்பட்ட பஸ்கள், 1972 ஜன.,1 முதல் அரசுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்துக் கழகங்களாக மாறின. என்றாலும், 1986 வரை, அரசு பஸ்கள் லாபத்திலேயே இயங்கின.அதன் பின்னர், போக்குவரத்து கழகங்களை, இரு கழகங்களும் சுயலாபத்துக்கு பயன்படுத்த துவங்கின. முறையற்ற நிர்வாகத்தாலும், தவறான கொள்கைகளாலும், 2020 மார்ச் நிலவரப்படி, போக்குவரத்து கழகங்கள், 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருந்தன. 'கொரோனா' முடக்கத்தால் சாலை போக்குவரத்து கழகத்திடம் பெற்ற, 2,000 கோடியும் சேர்ந்து இப்போது மொத்தக் கடன், 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த கடனுக்காக, பணிமனைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் வங்கிகளில் பிணையாக வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சம்பளம், சலுகை, ஓய்வுகால பணப்பலன் எதையுமே கொடுக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டுகளை வளைக்க, பல தரப்பு மக்களுக்கும், இலவச பஸ் பாஸ், சலுகைக் கட்டணம் என, இரு கழகங்களும் வாரி வழங்கின. அதனால் ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்டும் என வாக்குறுதி அளித்த போதிலும், இரு கட்சிகளுமே, ஆட்சியில் இருந்த காலங்களில் அதை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் தான், இப்போதைய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை சாத்தியப்படுத்தினால், அரசு போக்குவரத்து கழகங்கள், 'திருவோடு' ஏந்த வேண்டியது தான். இன்றைய நிலவரப்படி, அரசு போக்குவரத்து கழகங்களால், 19 ஆயிரத்து, 496 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் டவுன் பஸ்கள், 10 ஆயிரத்து 79. சென்னை மாநகரத்தில், 3,439 டவுன் பஸ்களும், பிற பகுதிகளில், 6,640 டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இவற்றில் தினசரி, 64 லட்சம் பேர் பயணிக்கின்றனர். அதில், 16 லட்சம் பேர் பெண்கள். தினசரி வருமானம், 7.62 கோடி ரூபாயில், பெண்கள் பங்கு மட்டும், 1.62 கோடி ரூபாய். எனவே, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி, 1.62 கோடி வீதம், மாதத்துக்கு, 48.06 கோடி ரூபாய், ஆண்டுக்கு, 583.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அ.தி.மு.க., ஆட்சி வந்தால்,தினசரி, 81 லட்சம், மாதம், 24.03 கோடி, ஆண்டுக்கு, 291.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

ஆனால், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் இந்த வாக்குறுதிகளை வரவேற்கின்றன.சி.ஐ.டி.யூ., துணைத் தலைவர் அன்பழகன் கூறுகையில், ''அரசு பஸ்கள் மாநிலத்தின் கல்வி, பொருளாதாரம், கிராமப்புற மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே பெண்களுக்கு இலவச பயணம், சலுகை கட்டணம் என்பதை வரவேற்கிறோம்.

ஆனால், இதனால் ஏற்படும் இழப்பு தொகையை அரசு, ஆண்டு தோறும் முழுமையாக வழங்க வேண்டும்,'' என்கிறார். போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலர் பத்மநாபன், ''திட்டத்தை செயல்படுத்தி விட்டு, தொகையை அரசு வழங்காத பட்சத்தில், நிதிநெருக்கடியால் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படும்,'' என்கிறார்.

அரசு பஸ்களில் சலுகை / இலவசங்கள்
* எம்.பி.,- - எம்.எல்.ஏ., மாஜிக்களுக்கு, இலவச பாஸ்பத்திரிக்கை நிருபர்கள், ஊடக நிருபர்களுக்கு இலவச பாஸ்.........

* சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களின் வாரிசுதாரர்களான விதவைகள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், புற்றுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், நாடக கலைஞர்கள், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இலவச பாஸ்

*பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச பாஸ்.

இழப்போ இழப்புபுறநகரில் இயக்கப்படும் பஸ்கள், 1 லிட்டர் டீசலுக்கு, 5.65 கி.மீ., வரை இயங்கும் நிலையில், நகர பஸ்கள், 1 லிட்டருக்கு, 4.85 முதல், 4.95 கி.மீ., துாரம் மட்டுமே இயங்குகின்றன. வருவாயைஎடுத்துக் கொண்டால், புறநகர் பஸ்களை விட, நகர பஸ்களில், 30 சதவீதம் குறைவு.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)