மோடியின் தலைமை கடவுளின் திட்டம் : சிவசேனா

மும்பை : நாட்டை வலிமைபடுத்துவதற்காக 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பது கடவுளின் திட்டம் என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடியை தொடர்ந்து புகழ்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வரும் சாம்னா, தற்போது வெளியிட்டுள்ள கட்டுரையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கியுள்ளது.


சாம்னா தனது கட்டுரையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. அவர்களில் முக்கியமானவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனுப்பப்பட்ட அழைப்பை மம்தா நிராகரித்துள்ளார்.


மேற்கு வங்க தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பதவியேற்பு விழாவிற்கு அழைத்தது தான் மம்தா, மோடி பதவியேற்பு விழா அழைப்பை புறக்கணித்ததற்கு காரணம். அவர்கள் இந்தியர்கள் தான். வங்கதேசத்தினர் அல்ல. மற்றவர்களை போல் பிரதமரின் பதவியேற்பில் பங்கேற்க அவர்களுக்கும் உரிமை உள்ளது.தேர்தல் வெற்றிக்கு பிறகு எதிர்க்கட்சிகள் பற்றி மோடி எதுவும் பேசவில்லை.


மனிதகுலத்திற்காக கலாசாரத்தின்படி புதிய ஆட்சியை நடத்த மோடி நினைக்கிறார். அதனால் தான் அவரது பதவியேற்பை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. மோடியின் 2வது திருவிழா இன்று துவங்குகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட மோடி விரும்பவில்லை. அதனால் தான் பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு அவர் அழைப்பு அனுப்பவில்லை. மோடியின் தலைமையில் நாடு செயல்பட வேண்டும் என்பது கடவுளின் திட்டம் என குறிப்பிட்டுள்ளது.


J.Isaac - bangalore,இந்தியா
30-மே-2019 21:41 Report Abuse
J.Isaac கடவுள் ஆக்கவும் செய்வார். அதிகம் சேட்டை பண்ணி நல்ல பிள்ளை போல் நடித்தால் அழிக்கவும் செய்வார்.
30-மே-2019 17:37 Report Abuse
ஆப்பு இப்பிடி ஓவ்வொரு ஆளும் உசுப்பேத்துங்க...
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-2019 16:02 Report Abuse
JEYAM தமிழன் JEYAM EVM க்கு கடவுள் என்று இன்னொரு அர்த்தம் உள்ளது என்று இப்போதான் புரிகிறது
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
30-மே-2019 15:39 Report Abuse
Palanisamy T மோடியின் தலைமை கடவுளின் திட்டமா? கடவுள் எப்போது அரசியலுக்கு வந்தார் தனது பதவியேற்பு விழாவிற்கு மம்தா பானர்ஜியை அழைத்தவர் ஏன் திமுக வினரை அழைக்க வில்லை? பதவியேற்பு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டதுதானே திமுக வை தேர்ந்தெடுத்த தமிழக மக்களும் மத்திய அரசுக்கு வரியும் செலுத்துகின்றார்கள். இதை ஏன் அவர் உணரவில்லை. இப்போதுக் கூட மம்தா கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் அந்த அம்மையாரின் சர்வாதி போக்கைக் காட்டி பாஜக வீல் சேர்ந்துவிட்டார். பதவி ஏற்பு விழாவிற்கு முன்பே பாஜக தன் உண்மையான முகத்தை வெளிப்படுத்திவிட்டார்கள். போகப் போகத்தான் இவர்களின் உண்மையான முகம் தெரியும்
jagadeesan - Hosur,இந்தியா
30-மே-2019 13:41 Report Abuse
jagadeesan கடந்த ஐந்து வருடங்களாக இதே ஆளு பிஜேபியை கழுவி கழுவி உத்தனார். இன்று அப்படியே மாறிவிட்டார். இதுவெல்லாம் அரசியலில் சகஜம். காங்கிரஸ் வென்று இருந்தால் இவரின் கதை வெறாக இருந்து இருக்கும்.
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 14:29Report Abuse
வல்வில் ஓரி இது உண்மை தான்.... இந்தாளு நாயுடு போல , சுடலை போல ஒரு சந்தர்ப்பவாதி...
john - riyadh,சவுதி அரேபியா
30-மே-2019 13:37 Report Abuse
john NOOOOOOOOOOOOOOOOOOOOOOO IT IS THE DECISION OF இந்தியன் ELECTION கமிஷன்.
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-2019 14:11Report Abuse
Chowkidar NandaIndiaIn Tamil Nadu too?...
TamilArasan - Nellai,இந்தியா
30-மே-2019 13:18 Report Abuse
TamilArasan சத்தியமான கருத்து...எனது எண்ணமும்...
Manithan - Chennai,இந்தியா
30-மே-2019 13:14 Report Abuse
Manithan மக்களை இன்னும் 5 வருடத்திற்கு சோதனை மேல் சோதனை கொடுப்பதும் கடவுளின் திட்டமாகத்தான் இருக்கும். எப்போ விமோச்சனம் கிடைக்கும் என்று கேட்டு சொல்லமுடியுமா.
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-2019 14:15Report Abuse
Chowkidar NandaIndiaஎன்ன செய்ய. அறுபது வருடங்கள் மக்களை சோதனை மேல் சோதனை செய்த பின் அல்லவா விமோச்சனம் அருளினார் ஆண்டவர். 2004 முதல் 2014 வரை அனல் மேல் புழுவாய் துடித்த மக்களுக்கு அதற்கு பின் தானே நிம்மதி கிடைத்தது. இம்ரான்கான் ரசிகர்கள் மீண்டுமொருமுறை பொறுமை காப்பது நல்லது....
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
30-மே-2019 12:36 Report Abuse
Rajavelu E. கடவுள் சில சமயம் சோதனைகளையும் தருவார்.
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
30-மே-2019 12:50Report Abuse
uthappaஉங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டாரே. சில சர்ச்சுகளில், சில மசூதிகளில் எல்லாம் அவர்களின் பாமர மக்களை மோடியை வீழ்த்த பிரார்த்தனை செய்ய சொன்னார்களே. எத்தனை எதிர்ப்புகள், எத்தனை வெறுப்புள்ள மக்கள், எத்தனை அநாகரீகமான கருத்துக்கள், இத்தனையும் மீறி ஒருவர் வென்று இருக்கிறார் என்றால் நிச்சய அது கடவுள் விருப்பம்....
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
30-மே-2019 13:03Report Abuse
HSRஅதான் இந்தியாவுக்கு 65 வருஷம் காங்கிரஸ் ஆட்சியை கொடுத்தாரே? அதுவா...
Sathya Dhara - chennai,இந்தியா
30-மே-2019 13:06Report Abuse
Sathya Dhara உத்தப்பா அவர்களே......என்னதான் ....கதறினாலும் .....இந்த துரோகிகளின் ஆட்டம். எந்த கடவுளாக இருந்தாலும்.. தவறான பிரார்த்தனைகளை ஏற்கவே மாட்டார்கள்....
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
30-மே-2019 13:31Report Abuse
வல்வில் ஓரி கடவுள் உங்களுக்கு சோதனை தந்தா பரவாயில்ல...நீங்க பொதுஜனத்துக்கு தர்றீங்க பாரு சோதனைகள்...அதுதான் தாங்க முடியல.....
Anand - chennai,இந்தியா
30-மே-2019 13:54Report Abuse
Anandஉங்கள் மிஷினரிகளுக்கு ஆப்பு வைத்ததிலிருந்தே என கூற வேண்டியதுதானே......
sundar - chennai,இந்தியா
30-மே-2019 14:05Report Abuse
sundarசத்யா @ இந்து துரோகிகளின் ஆட்டம் என்று சொல்லலாமா ?...
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
30-மே-2019 14:06Report Abuse
Chowkidar NandaIndiaமக்கள் அறுபது வருடங்கள் வேதனையை அனுபவித்த பின்னர் தானே ஆண்டவன் கண் திறந்தது? எனவே கவலை வேண்டாம் ராஜவேலு....
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
30-மே-2019 12:33 Report Abuse
JEYAM தமிழன் JEYAM அருண் ஜெட்லீ க்கு அந்த தகுதி நிறையவே உள்ளது...இனி எக்காலத்திலும் அந்த வாய்ப்பு வரப்போவதில்லை..
மேலும் 13 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)