ராகுல் வீடுமுன் குவியும் தொண்டர்கள்

புதுடில்லி : காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக பிடிவாதம் பிடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுலே தலைவராக நீடிக்க வலியுறுத்தி டில்லியில் ராகுல் வீடு முன் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

52 எம்.பி., சீட் :நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற இயலாமல் வெறும் 53 சீட்டுகளை மட்டுமே வென்று காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. அதிருப்தியடைந்த ராகுல், சமீபத்தில் நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து விலக விரும்பினார். தலைவர்கள் அவரே நீடிக்க வலியுறுத்தினர். கட்சியை மறுசீரமைப்பு செய்யவும் அவருக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிடிவாதம் :எனினும், பதவி விலகும் முடிவில் ராகுல் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து புதுடில்லியில் உள்ள ராகுல் வீடு முன்பு இன்று(மே 29) காங்கிரஸ் தொண்டர்கள் நுாற்றுக்கணக்கில் குவிந்தனர். டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ராகுல் வீட்டிற்குள் சென்று தொடர்ந்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் :இதேபோல தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், ராகுலே காங்கிரஸ் தலைவராக நீடிக்க வலியுறுத்தி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. தேனாம்பேட்டையில் தொடங்கிய பேரணி, காமராஜர் அரங்கம் முன் முடிந்தது. இதில் பங்கேற்றோர், ராகுல் தலைவராக நீடிக்க கோரி, கோஷங்களை எழுப்பினர்.

தீக்குளிப்பு :பேரணியில் பங்கேற்ற தொண்டர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, திடீரென தனது உடலில் ஊற்றி, தீப்பற்ற வைக்க முயன்றுள்ளார். அவரிடமிருந்து கேனை பறித்து, தண்ணீரை ஊற்றியுள்ளனர் சக தொண்டர்கள்.

தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப் போன்ற சில மாநிலங்களிலும் ராகுலுக்கு ஆதரவான பேரணிகள் நடந்து வருகின்றன. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் தலைவராக நீடிக்க வேண்டுமென ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Kannan Iyer - Bangalore,இந்தியா
01-ஜூன்-2019 07:35 Report Abuse
Kannan Iyer 22 லட்சம் காலியிடங்கள் - இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை 6 மாதங்களுக்கு மேல் காலியாக இருக்கும்cஇடங்களுக்கு, அவற்றை நிரப்ப முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று நிரூபணiம் செய்தால் ஒழிய பட்ஜெட்டில் நிதி oth
சீனு, கூடுவாஞ்சேரி என்ன இருந்தாலும் நம்ம எழுந்து வா தலைவா கூட்டத்திற்கு முன் இதெல்லாம் எம்மாத்திரம்.
Sundaram Bhanumoorthy - coimbatore,இந்தியா
29-மே-2019 20:24 Report Abuse
Sundaram Bhanumoorthy தி.மு.க.நிலைமை.நாய் பெற்ற தெங்கம்பழம்.உருட்டி விளையாடலாம்.
கைப்புள்ள - nj,இந்தியா
29-மே-2019 19:42 Report Abuse
கைப்புள்ள அசிங்கப்பட்ட பப்பு, வெளியில் கூட தல காட்ட மாட்டேங்கிறான். எவ்வளவு கோமாளித்தனம் பண்ணினான். கட்டிபுடிச்சிட்டு கண் அடிக்கிறானாம், கோமாளி. அதுக்கு சொம்புங்க விட்டானுக பாரு அலப்பறை. பாத்தா மக்கள் சாணியை கரைச்சி ஊத்திட்டாங்க.
கைப்புள்ள - nj,இந்தியா
29-மே-2019 19:34 Report Abuse
கைப்புள்ள சந்தோஷத்துல துள்ளி குதிக்கிறதுன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா? அதைத்தான் நான் இப்போ செஞ்சுகிட்டு இருக்கேன். தினமும் இவர்கள் அழுது கருத்து போடுறதை பார்த்து செம ஜாலியா இருக்கு. இன்னும் அஞ்சு வருஷம். சூப்பர்.
Sanjay - Chennai,இந்தியா
29-மே-2019 20:06Report Abuse
Sanjayகடந்த இரண்டு வருடமாக, மோடி எதிர்ப்பு என்ற பெயரில் ரொம்ப கேவலமாக கருத்து போட்டார்கள்....
கைப்புள்ள - nj,இந்தியா
29-மே-2019 19:30 Report Abuse
கைப்புள்ள உருப்படாத ஒரு கருமாந்திரக்கு எவ்வளவுதான் முட்டு கொடுப்பது? தேர்தலுக்கு முன் முட்டு குடுத்தானுக. கருமாந்திரம் கரை ஏறவில்லை. அவனுக எல்லாம் டையர்டு ஆகி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கானுங்க. இப்போ தேர்தலுக்கு அப்புறம் முட்டு கொடுக்க இவங்க வந்து இருக்காங்க..
கைப்புள்ள - nj,இந்தியா
29-மே-2019 19:26 Report Abuse
கைப்புள்ள ஐயே மச்சி இது ரெம்ப பழைய ஸீன்.. ஒன்னத்துக்கும் ஆவாத கழிசடை ன்னு மக்கள் தொடச்சி தூர எரிஞ்சு இருக்காங்க. அப்புறம் நீ தீ குளிச்சா என்ன இல்ல ட்டீ குடிச்சா என்ன? ஒன்னும் ஆவாது. பேசாம காங்கிரசுக்கு காரியத்தை பண்ணிட்டு காசில் போயி குளிச்சிட்டு போங்க.
TamilArasan - Nellai,இந்தியா
29-மே-2019 19:02 Report Abuse
TamilArasan வாழ்வே மாயம்... இந்த வாழ்வே மாயம்... நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா வேஷம் கலைக்கவும் ஓய்வு (தாய்லாந்தில்) எடுக்கவும் வேளை நெருங்குதம்மா வம்சம் மூலம் வந்த பயணம் முடியுதம்மா பாட்டன் (மோதிலால் நேரு) கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை மோடி கொண்டு போகும் நேரமம்மா....
Aarkay - Pondy,இந்தியா
29-மே-2019 19:00 Report Abuse
Aarkay தலைக்கு ஒரு குவாட்டர், பிரியாணி பொட்டலம், ஐநூறு ரூபாய் தண்டம் உலகுக்கே தெரியும் இது சூப்பர் ட்ராமா என்று.... உலக மகா நடிப்புடா இது சாமி
29-மே-2019 18:55 Report Abuse
Chandran நாங்களும் அத தான் சொல்றோம். ராகுல் பதவி விலக விடமாட்டோம். அதான் பிஜேபி கும் நல்லது
மேலும் 30 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)