அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளான்!

திருப்பூர்: தினகரன் தலைமையிலான, அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளானை வகுத்துள்ளது.
லோக்சபா தேர்தலில், தினகரன் தலைமை யிலான, அ.ம.மு.க.,வின் வேட்பாளர்கள், அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை கணிசமாக பிரிப்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை பொய்த்தது. அ.தி.மு.க., தோல்வியடைந்த போதும், அதற்கு, அ.ம.மு.க., காரணமாக அமையவில்லை.

கமலின், மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை, பல இடங்களில், அ.ம.மு.க.,வை பின்னுக்கு தள்ளின. அனைத்து தொகுதிகளிலும், டிபாசிட்டை, அ.ம.மு.க., இழந்திருக்கிறது.சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது இடங்களை கைப்பற்றியதன் மூலம், அ.தி.மு.க.,வின் ஆட்சி, தமிழகத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளது.


சட்டசபை இடைத்தேர்தல்களிலும், அ.ம.மு.க.,வால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, அ.தி.மு.க.,
தலைவர்களுக்கு, தன் தயவு தேவைப்படும் என, தினகரன் எண்ணியதும் நடக்கவில்லை. 'அ.தி. மு.க., வில், ஆட்சி அமைப்புகளில் பங்கேற்காத நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலரிடம் இருந்த, தினகரன் மீதான பாசமும் இனி நீடிக்காது' எனக் கூறுகின்றனர், அ.தி.மு.க., மூத்த தலைவர்கள்.


தவறான வழிகாட்டுதலால் பிரிந்து சென்றோரை, எப்போதுமே, அ.தி.மு.க.,வுக்கு அழைக்கும் வழக்கத்தை, முதல்வர், இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கொண்டு இருக்கின்றனர். இம்முறை, இவர்களின் அழைப்பை பலர் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில், அ.ம.மு.க.,வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான திட்டங்களை, அ.தி.மு.க., வகுத்துள்ளது.


என்னென்ன பிளான்?


பிளான் 1: அ.தி.மு.க., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் களை முழுமையாக, முதல்வர் - துணை முதல்வர் தலைமையை ஏற்கவைப்பது.


பிளான் 2: அ.ம.மு.க., வில் உள்ள முக்கிய நிர்வாகி களை, அ.தி.மு.க.,வுக்கு இழுப்பது, தேவைப்பட்டால் குழு ஏற்படுத்துவது அல்லது பேச்சுவார்த்தை நடத்துவது.


பிளான் 3: அ.ம.மு.க., வில் இருந்து, தாங்களாகவே, அ.தி.மு.க.,வில் சேர விரும்புவோருக்கு, உரிய மரியாதை மற்றும் வரவேற்பளிப்பது.


பிளான் 4: முக்கியமாக, அ.ம.மு.க.,வில் உள்ளவர்களை, வேறு கட்சிகளுக்கு செல்ல விடாமல், அ.தி.மு.க.,விலேயே சேர வைப்பது.


பிளான் 5: சசிகலா குடும்பத்தினரை, புற வழியில் கூட, அ.தி.மு.க.,வில் அனுமதிக் காமல் தடுப்பது.லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது.வரும், 2021ம் ஆண்டில் நடக்கவுள்ள சட்ட சபை தேர்தலுக்குள், அ.ம. மு.க.,வில் உள்ளவர்களை, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக்குவதன் மூலம், தி.மு.க., அணியை எதிர் கொள்வது எளிதாகும் என, அ.தி.மு.க.,வினர் கணக்கு போட்டு, காய்களைநகர்த்த திட்டமிட்டுள்ளனர்.


Ab Cd - Dammam,சவுதி அரேபியா
26-மே-2019 17:50 Report Abuse
Ab Cd ஒட்டுக்கு நாலாயிரம் கொடுத்தும் ஒன்பது தொகுதி தான் ஜெயிக்க முடிந்தது இதிலென்ன பெருமை
TAMIL - THIRUVARUR,இந்தியா
26-மே-2019 17:19 Report Abuse
TAMIL உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால்தான் தெரியும்...
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
26-மே-2019 15:46 Report Abuse
அம்பி ஐயர் ஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் நிலைமை இப்படியே இருக்கும் எனச் சொல்ல முடியாது.... அதிமுகவின் ஓட்டுக்களை அதிகமாகவே அமமுக பிரிக்கும்.... அது திமுகவிற்கே சாதகமாக முடியும்..... மூன்று கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை.... உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால்தான் தெரியும்...
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
26-மே-2019 12:23 Report Abuse
வந்தியதேவன் ///சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது.//// வடிவேல் காமெடி மாதிரி.... “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாய்யா... இவன் ரொம்ப நல்லவன்யா...”ங்கற மாதிரி... ஒரு ஆளுங்கட்சி, படை பலமும், பண பலமும் கொண்டு... கிட்டதட்ட ஒன்றரை கோடி உறுப்பினர்கள் (அப்படீன்னு அவங்க வாயாலயே சொன்னது) கொண்ட ஒரு மாபெரும் கட்சி... இருபத்தியிரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு... ஒற்றை இலக்கத்தில் அதுவும் பார்டரான ஒன்பது தொகுதிகளில் ஜெயிச்சதை பெருமையா போட்டிருக்கீங்களே... “இன்னுமா... இவங்கள நம்புறீங்க...”...ன்னு கேட்கத் தோணுது... மரண அடி விழுந்து... எல்லா இடத்திலேயும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சி ஜெயிச்சிருக்கு... அதைவிட்டுவிட்டு... “சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது.“‘ அப்படீன்னு போட்டிருக்கேளே... இது கொஞ்சம் ஓவராத் தெரியல...?
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
26-மே-2019 12:19 Report Abuse
JEYAM தமிழன் JEYAM உங்க பாட்சா சட்டமன்ற தேர்தலில் பலிக்காது
Soosaa - CHENNAI,இந்தியா
26-மே-2019 12:08 Report Abuse
Soosaa Badhippu illanu solla mudiyadhu nalu idangalil a ma mu ka vote admk voda kootinal admk win agi 9 Ku badhila 13 ah agiyirukkum. Ippa irukara ratio Mari irukkum 13 : 9 , 9:13 nu agi innum themba solla mudiyum TN Ku ala thagudhiya makkal admk Ku than koduthirukkanganu
Guru - Madurai,இந்தியா
26-மே-2019 11:59 Report Abuse
Guru Why தினமலர் always admk and bjp இக்கு ஜின் ஜா,And they started giving importance to kamal, think why?
baskeran - london,யுனைடெட் கிங்டம்
26-மே-2019 11:11 Report Abuse
baskeran Do you have any idea for face to rajinikanth?
sripa - muscat,ஓமன்
26-மே-2019 10:56 Report Abuse
sripa தினகரன் வெறும் வாயில் வடை சுடுவதில் வல்லவர் என்பதை இந்த தேர்தலில் நிரூபித்து விட்டார். அவரை நம்பி சென்றவர்கள் மோசம் போனது தான் மிச்சம். எப்போதும் கஷ்டகாலத்தில் ஒரே கட்சியில் இருப்பவர்கள் தான் பிற்காலத்தில் கட்சியால் அங்கீகரிக்க படுகின்றனர்.
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
26-மே-2019 09:44 Report Abuse
சிவ.இளங்கோவன் . உங்க பிளான் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாகவே அமையும் ..
மேலும் 11 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)