கோஹிமா : நாகா மக்கள் முன்னணியின், ஏழு, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்,'' என,நாகாலாந்து சபாநாயகர், விகோ ஓ யோசு கூறினார்.
எதிர்க்கட்சி :
வடகிழக்கு மாநிலமான, நாகாலாந்தில், முதல்வர், நெய்பு ரியோ தலைமையில், பா.ஜ., - தேசிய ஜனநாயக மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது.சட்டசபை சபாநாயகராக, தே.ஜ.ம., கட்சியைச் சேர்ந்த, விகோ ஓ யோசு பதவி வகிக்கிறார்.இம்மாநிலத்தில், ஆளும், பா.ஜ., கூட்டணியில், தே.ஜ.ம.க., 20; பா.ஜ., 12; சுயேச்சை, ஒருவர் என, 33 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
எதிர்க்கட்சியாக, நாகாலாந்து மக்கள் முன்னணியின், 26 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், தேசிய ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர், டோஹோ யெப்தோமி, காங்கிரஸ் வேட்பாளர், கே.எஸ்.சிஷி போட்டியிட்டனர். காங்., வேட்பாளருக்கு, நாகா மக்கள் முன்னணி ஆதரவு அளித்தது. ஆனால், அக்கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேர், காங்.,ஆதரவை எதிர்த்தனர்.
ஆலோசனை:
ஏழு எம்.எல்.ஏ.,க் களும், பா.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக்கூறி, ஏழு, எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு, நாகா மக்கள் முன்னணி, சபாநாயகரிடம் மனு கொடுத்தது.
இதுபற்றி, செய்தியாளர்களிடம் பேசிய, சபாநாயகர், விகோ ஓ யோசு, ''சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, விரைவில் முடிவு அறிவிக்கப்படும்,'' என்றார்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர், டோஹோ யெப்தோமி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து