தாத்தாவுக்காக பதவியை துறக்கும் பேரன்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தும்கூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா தோல்வியடைந்தார். அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, ஹசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தான் தேவகவுடா முன்னர் போட்டியிட்டார். பேரனுக்காக இந்த முறை தொகுதி மாறி தேவகவுடா தோல்வியடைந்தார்.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், மதசார்பற்ற ஜனதா தள தொண்டர்களின் நம்பிக்கையை பெறவும், தேவகவுடா தோல்வியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவும் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ஹசன் தொகுதியில், மீண்டும் தேவகவுடா போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)