அமித்ஷாவுக்கு அமைச்சர் பதவி

புதுடில்லி : லோக்சபா தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து தற்போது அனைவரின் கவனமும் மோடியின் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம் பெற போகிறார்கள், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளின் பக்கம் திரும்பி உள்ளது.
நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் மோடியை தொடர்ந்து, அமித்ஷா 5 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ.,வின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு அமித்ஷாவின் பங்கு முக்கியமானது.
இதனால் புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவிற்கு இடம்தர அதிக வாய்ப்புள்ளது. முக்கிய துறை ஒன்று அமித்ஷாவுக்கு அளிக்க மோடி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் கட்சியின் தலைவராக அவரையே தொடர வைக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அமைச்சரவையில் மோடிக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த துறை அமித்ஷாவிடம் தரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 5 ஆண்டு கால ஆட்சி தேசிய பாதுகாப்பு, தேசியம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும் பா.ஜ., ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வது தொடர்பாக அமித்ஷாவும், மோடியும் ஆலோசித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)